பாட்டானும் விருந்து
ஓம்புவார் இம்மைக்கண் எய்தும் பயன் கூறப்பட்டது.
செல்விருந்
தோம்பி
வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு.
தன் கண்சென்ற விருந்தைப் பேணிப் பின் செல்லக் கடவ விருந்தைப் பார்த்துத் தான், அதனோடு உண்ண இருப்பான்;
மறுபிறப்பில் தேவனாய் வானிலுள்ளார்க்கு நல் விருந்து ஆம். ''வருவிருந்து'' என்பது இடவழு அமைதி. நல்விருந்து: எய்தா விருந்து. இதனான் மறுமைக்கண் எய்தும் பயன் கூறப்பட்டது. இனைத்துணைத் தென்பதொன் றில்லை: விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன்.
விருந்தோம்பல் ஆகிய வேள்விப் பயன் இன்ன அளவிற்று என்பதோர் அளவுடைத்தன்று; அதற்கு அவ்விருந்தின் தகுதியளவே அளவு. ஐம்பெரு வேள்வியின் ஒன்றாகலின் ''வேள்வி'' என்றும், பொருள் அளவு தான் சிறிது ஆயினும் தக்கார்கைப் பட்டக்கால்,
வான் சிறிதாப் போர்த்து விடும் நாலடி.38 ஆகலின், இனைத்துணைத்து என்பது ஒன்று இல்லை என்றும் கூறினார். இதனான் இருமையும் பயத்தற்குக் காரணம் கூறப்பட்டது. பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார். நிலையாப் பொருளை வருந்திக் காத்துப் பின் அதனை இழந்து இது பொழுது யாம் பற்றுக்கோடு இலமாயினேம் என்று இரங்குவர்; அப்பொருளான் விருந்தினரை ஓம்பி வேள்விப் பயனை எய்தும் பொறியிலாதார். "ஈட்டிய ஒண்பொருளைக் காத்தலும் ஆங்கே கடுந்துன்பம் நாலடி.280 "ஆகலின், ''பரிந்து ஓம்பி'' என்றார். ''வேள்வி'' ஆகுபெயர். உடமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை மடவார்கண் உண்டு. உடைமைக் |