திருக்குறள்
ஓலை எண் :   38

Zoom In NormalZoom Out

பிறர்க்கு  நன்மையைக்   கொடுத்து   இனிமைப்   பண்பின்  நீங்காத
சொல்.  நீதி:  உலகத்தோடு  பொருந்துதல்.  ''பண்பு''  என்பது ஈண்டு
அதிகாரத்தான்  இனிமைமேல்  நின்றது.  தலைப்பிரிதல் - ஒரு சொல்
நீர்மைத்து.  சிறுமையுள்  நீங்கிய  இன்சொல்  மறுமையும் இம்மையும்
இன்பந்  தரும்.  பொருளால் பிறர்க்கு நோய் செய்யாத இனிய சொல்;
ஒருவனுக்கு  இருமையினும்  இன்பத்தைப் பயக்கும். மறுமை இன்பம்
பெரிதாகலின்,  முன் கூறப்பட்டது. இம்மை இன்பமாவது, உலகம் தன்
வயத்ததாகலான்   நல்லன   எய்தி   இன்புறுதல்.   இவை  இரண்டு
பாட்டானும்  இருமைப்பயனும் ஒருங்கு எய்துதல் வலியுறுத்தப்பட்டது.
இன்சொல்  இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு
வது. பிறர் கூறும் இன்சொல் தனக்கு இன்பம் பயத்தலை அனுபவித்து
அறிகின்றவன்;  அது  நிற்கப்  பிறர்மாட்டு வன்சொல்லைச் சொல்வது
என்ன  பயன்  கருதி?  ''இனிது''  என்றது  வினைக்குறிப்புப் பெயர்.
கடுஞ்சொல்  பிறர்க்கும்  இன்னாதாகலின், அது  கூறலாகாது என்பது
கருத்து.  இனிய  உளவாக  இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந்
தற்று.  அறம்  பயக்கும்  இனிய  சொற்களும் தனக்கு உளவாயிருக்க,
அவற்றைக்  கூறாது  பாவம்  பயக்கும் இன்னாத சொற்களை ஒருவன்
கூறுதல்;  இனிய  கனிகளும் தன் கைக்கண் உளவாயிருக்க, அவற்றை
நுகராது  காய்களை  நுகர்ந்ததனோடு  ஒக்கும். ''கூறல்'' என்பதனான்
சொற்கள்  என்பது பெற்றாம். பொருளை விசேடித்து நின்ற பண்புகள்
உவமைக்கண்ணும்  சென்றன. இனிய கனிகள் என்றது ஒளவை உண்ட
நெல்லிக்கனிபோல  அமிழ்தானவற்றை.  இன்னாத  காய்கள்  என்றது
காஞ்சிரங்காய்   போல   நஞ்சானவற்றை.   கடுஞ்சொல் சொல்லுதல்
முடிவில்  தனக்கே இன்னாது என்பதாம். இவை இரண்டு பாட்டானும்
இன்னாத  கூறலின் குற்றம் கூறப்பட்டது. அஃதாவது, தனக்குப் பிறர்
செய்த    நன்மையை    மறவாமை.  இனியவை   கூறி   இல்லறம்
வழுவாதார்க்கு உய்திஇல்