திருக்குறள்
ஓலை எண் :   40

Zoom In NormalZoom Out

கொள்வர்     பயன்தெரி    வார்.   தமக்குத்    தினையளவிற்றாய
உபகாரத்தை  ஒருவன்  செய்தானாயினும்; அதனை அவ்வளவிற்றாகக்
கருதாது,  பனையளவிற்றாகக் கருதுவர் அக்கருத்தின் பயன் தெரிவார்.
''தினை'',  ''பனை''  என்பன சிறுமை பெருமைகட்குக்  காட்டுவன சில
அளவை.  அக்கருத்தின்  பயனாவது அங்ஙனம் கருதுவார்க்கு வரும்
பயன்.  உதவி  வரைத்தன்  றுதவி  உதவி  செயப்பட்டார்  சால்பின்
வரைத்து.   கைம்மாறான   உதவி,   காரணத்தானும்   பொருளானும்
காலத்தானும்  ஆகிய  மூவகையானும்  முன்  செய்த உதவியளவிற்று
அன்று;  அதனைச் செய்வித்துக் கொண்டவர்தம் அமைதி அளவிற்று.
''சால்பு  எவ்வளவு  பெரிதாயிற்று,  உதவியும்  அவ்வளவு பெரிதாம்''
என்பார், "சால்பின்"  வரைத்து  என்றார். இவை இரண்டு பாட்டானும்
மூன்றும்  அல்லாத  உதவி  மாத்திரமும் அறிவார்க்குச் செய்த வழிப்
பெரிதாம்   என்பது   கூறப்பட்டது.  மறவற்க  மாசற்றார்  கேண்மை:
துறவற்க  துன்பத்துள்  துப்பாயார் நட்பு. துன்பக் காலத்துத் தனக்குப்
பற்றுக்கோடாயினாரது  நட்பை  விடாதொழிக;  அறிவொழுக்கங்களில்
குற்றமற்றாரது  கேண்மையை  மறவா தொழிக. கேண்மை: கேள் ஆம்
தன்மை.  இம்மைக்கு  உறுதி  கூறுவார், மறுமைக்கு உறுதியும் உடன்
கூறினார்.   எழுமை   எழுபிறப்பும்   உள்ளுவர்  தங்கண்  விழுமந்
துடைத்தவர்  நட்பு.  தம்கண்  எய்திய  துன்பத்தை நீக்கினவருடைய
நட்பினை;   எழுமையினையுடைய   தம்   எழுவகைப்   பிறப்பினும்
நினைப்பர்  நல்லோர்.  ''எழுமை''  என்றது வினைப்பயன் தொடரும்
ஏழு  பிறப்பினை: அது வளையாபதியுள் கண்டது. எழுவகைப் பிறப்பு
மேலே  உரைத்தாம்  குறள்  62  விரைவு  தோன்றத்  ''துடைத்தவர்''
என்றார்.   நினைத்தலாவது   துன்பம்  துடைத்தலான்,  அவர்மாட்டு
உளதாகிய  அன்பு  பிறப்புத்தோறும்  தொடர்ந்து  அன்புடையராதல்.
இவை இரண்டுபாட்டானும் நன்றி செய்தாரது நட்பு