திருக்குறள்
ஓலை எண் :   41

Zoom In NormalZoom Out

விடலாகாது  என்பது   கூறப்பட்டது,   நன்றி   மறப்பது  நன்றன்று
நன்றல்லது   அன்றே   மறப்பது   நல்லது.  ஒருவன்  முன் செய்த
நன்மையை   மறப்பது  ஒருவற்கு  அறன்  அன்று;  அவன்  செய்த
தீமையைச்  செய்த  பொழுதே மறப்பது அறன். இரண்டும் ஒருவனாற்
செய்யப்பட்ட  வழி,  மறப்பதும்  மறவாததும்  வகுத்துக்  கூறியவாறு.
கொன்றன்ன  இன்னா  செயினும்  அவர்செய்த  ஒன்றுநன்  றுள்ளக்
கெடும்.  தமக்கு முன் ஒரு நன்மை செய்தவர், பின் கொன்றால் ஒத்த
இன்னாதவற்றைச்  செய்தாராயினும்;  அவையெல்லாம்  அவர் செய்த
நன்மை   ஒன்றனையும்   நினைக்க   இல்லையாம்.   தினைத்துணை
பனைத்துணையாகக்       கொள்ளப்படுதலின்,     அவ்வொன்றுமே
அவற்றையெல்லாம்   கெடுக்கும்   என்பதாம்.  இதனால்  நன்றல்லது
அன்றே  மறக்கும்  திறம்  கூறப்பட்டது.  எந்நன்றி  கொன்றார்க்கும்
உய்வுண்டாம்   உய்வில்லை  செய்ந்நன்றி  கொன்ற  மகற்கு. பெரிய
அறங்களைச்  சிதைத்தார்க்கும் பாவத்தின் நீங்கும் வாயில் உண்டாம்;
ஒருவன்  செய்த  நன்றியைச்  சிதைத்த  மகனுக்கு  அஃது  இல்லை.
பெரிய அறங்களைச் சிதைத்தலாவது, ஆன்முலை அறுத்தலும், மகளிர்
கருவினைச்  சிதைத்தலும்,  பார்ப்பார்த்தப்புதலும்  புறநா.34 முதலிய
பாதகங்களைச்  செய்தல்.  இதனால் செய்ந்நன்றி கோறலின் கொடுமை
கூறப்பட்டது.  அஃதாவது,  பகை,  நொதுமல்,நட்பு  என்னும்  மூன்று
பகுதியினும்  அறத்தின்  வழுவாது ஒப்பநிற்கும் நிலைமை .இது நன்றி
செய்தார்மாட்டு   அந்நன்றியினை   நினைத்தவழிச்  சிதையுமன்றே?
அவ்விடத்துஞ் சிதையாலா