லாவற்றுள்ளும் தலையாய
அறிவு என்று
சொல்லுவார் நல்லோர், தம்மைச் செறுவார் மாட்டும் தீவினைகளைச் செய்யாது விடுதலை. விடுதற்குக் காரணம் ஆகிய அறிவை ''விடுதல்'' என்றும், செய்யத் தக்குழியுஞ் ''செய்யாது'' ஒழியவே தமக்குத் துன்பம் வாராது என உய்த்துணர்தலின், அதனை ''அறிவினுள் எல்லாம் தலை'' என்றும் கூறினார். செய்யாது
என்பது கடைக்குறைந்து நின்றது. இவை மூன்று பாட்டானும் தீவினைக்கு அஞ்சவேண்டும் என்பது கூறப்பட்டது. மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு. ஒருவன் பிறனுக்குக் கேடு பயக்கும் வினையை மறந்தும் எண்ணாதொழிக, எண்ணுவானாயின், தனக்குக் கேடு
பயக்கும் வினையை அறக்கடவுள் எண்ணும். ''கேடு'' என்பன ஆகுபெயர். சூழ்கின்ற பொழுதேதானும் உடன் சூழ்தலின், இவன் பிற்படினும் அறக்கடவுள் முற்படும் என்பது பெறப்பட்டது. அறக்கடவுள் எண்ணுதலாவது, அவன் கெடத் தான் நீங்க நினைத்தல். தீவினை எண்ணலும் ஆகாது என்பதாம். இலன்என்று தீயவை செய்யற்க செய்யின் இலன்
ஆகும் மற்றும் பெயர்த்து. யான் வறியன் என்று கருதி அது தீர்தற்பொருட்டுப் பிறர்க்குத் தீவினைகளை ஒருவன் செய்யாது ஒழிக, செய்வானாயின் பெயர்த்தும் வறியன் ஆம். அத் தீவினையால் பிறவிதோறும் இலன் ஆம் என்பதாம். அன் விகுதி முன் தனித்தன்மையினும் பின் படர்க்கை ஒருமையினும் வந்தது. தனித்தன்மை ''உளனா என் உயிரை உண்டு''
கலித். குறிஞ்சி.22 என்பதனாலும் அறிக. மற்று - அசை நிலை. ''இலம்''் என்று பாடம் ஓது |