லின், ''மன் உயிர்''
என்றார். அஞ்சுதல்- துன்பம்
நோக்கி அஞ்சுதல். அன்ன அறத்தினோன் கொலை முதலிய பாவங்கள் செய்யான் எனவே மறுமைக்கண் நரகம் புகாமைக்கு
ஏது கூறியவாறாயிற்று. அல்லல் அருளாள்வார்க் கில்லை
வளிவழங்கும் மல்லல்மா ஞாலம் கரி. அருளுடையார்க்கு இம்மையினும் ஒரு துன்பம் உண்டாகாது, அதற்குக் காற்று இயங்குகின்ற வளப்பத்தை உடைய பெரிய ஞாலத்து வாழ்வார் சான்று. சான்று ஆவார்
தாம் கண்டு தேறிய பொருளைக் காணாதார்க்குத் தேற்றுதற்கு உரியவர். அருள் ஆள்வார்க்கு அல்லல் உண்டாக ஒரு காலத்தும்
ஒருவரும் கண்டறிவார் இன்மையின், இன்மை முகத்தான் ஞாலத்தார் யாவரும் சான்று என்பார். ''வளி வழங்கும் மல்லல் மாஞாலம் கரி'' என்றார். எனவே, இம்மைக்கண் என்பது பெற்றாம். ''ஞாலம்'' ஆகு பெயர். இவை மூன்று பாட்டானும் அத்துணையுடையார்க்கு இருமையினும் துன்பம் இல்லாமை கூறப்பட்டது. பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி அல்லவை செய்தொழுகு வார். உயிர்கள் மாட்டுச் செய்யப்படும் அருளைத் தவிர்ந்து தவிரப்படும் கொடுமைகளைச் செய்து ஒழுகுவாரை, முன்னும் உறுதிப்பொருளைச் செய்யாது தாம் துன்புறுகின்றமையை மறந்தவர் என்று சொல்லுவர் நல்லோர். உறுதிப்பொருள்: அறம், ''துன்புறுதல்'' - பிறவித்துன்பம் மூன்றனையும் அனுபவித்தல். மறந்திலராயின், அவ்வாறு ஒழுகார் என்பது கருத்து. அருளில்லார்க் கவ்வுலகம் இல்லை பொருளில்லார்க் கிவ்வுலகம் இல்லாகி யாங்கு. உயிர்கள்மேல்
அருள் இல்லாதார்க்கு வீட்டுலகத்து இன்பம் இல்லை, ெபொருள் இல்லாதார்க்கு இவ்வுலகத்து இன்பம் இல்லையாயினாற் போல. ''அவ்வுலகம், இவ்வுலகம்'' என்பன ஆகுபெயர்.
இவ்வுலகத்து
இன்பங்கட்குப் பொருள் காரணமானாற்போல அவ்வுலகத்து இன்பங்கட்கு |