திருக்குறள்
ஓலை எண் :   87

Zoom In NormalZoom Out

அருளுடைமைக்கு  மாறான  கொலைப்பாவத்தைப்  பின்னும்  உளது
ஆக்கலின்  அதற்குக்  காரணம்  ஆதலையும்  முன்னும்   அதனான்
வருதலின்  அதன்  காரியம்   ஆதலையும்  ஒருங்குடையதாய  ஊன்
உண்டல்   அருளுடையார்க்கு   இயைவதன்று.   ஆகலின்  அதனை
விலக்குதற்கு  இஃது  அருள்  உடைமையின்  பின்  வைக்கப்பட்டது.
தன்னூன்  பெருக்கற்குத்  தான்பிறி  தூனுண்பான்  எங்ஙனம் ஆளும்
அருள். தன் உடம்பை வீக்குதற் பொருட்டுத் தான் பிறிதோர் உயிரின்
உடம்பைத்  தின்பவன்,  எவ்வகையான் நடத்தும்  அருளினை? பயன்
இலாத   ஊன்   பெருக்கலைப்   பயன்   எனக்கருதி  இக்கொடுமை
செய்வானே அறிவிலாத கொடியோன் என்றவாறு ஆயிற்று. ''எங்ஙனம்
ஆளும்  அருள்''் என்பது, ஆளான் என்பது பயப்ப நின்ற  இகழ்ச்சிக்
குறிப்பு.    பொருளாட்சி    போற்றாதார்க்கு   இல்லை  அருளாட்சி
ஆங்கில்லை   ஊன்தின்   பவர்க்கு.   பொருளால்  பயன்  கோடல்
அதனைப்  பாதுகாவாதார்க்கு  இல்லை, அது போல அருளால் பயன்
கோடல்  ஊன்  தின்பவர்களுக்கு இல்லை. பொருட்பயன் இழத்தற்குக்
காரணம்  காவாமை  போல,  அருட்பயன் இழத்தற்கு ஊன்  தின்னல்
காரணம்   என்பதாயிற்று.   ஊன்  தின்றாராயினும்  உயிர்கட்கு  ஒரு
தீங்கும்   நினையாதார்க்கு   அருள்   ஆள்தற்கு  இழுக்கு  இல்லை
என்பாரை மறுத்து, அஃது உண்டு என்பது இவை இரண்டு பாட்டானும்
கூறப்பட்டது.  படைகொண்டார்  நெஞ்சம்போல் நன்றூக்கா தொன்றன்
உடல்சுவை   உண்டார்  மனம்.  கொலைக்  கருவியை  தம்  கையில்
கொண்டவர்     மனம்    அதனால்    செய்யும்    கொலையையே
நோக்குவதல்லது  அருளை  நோக்காதவாறு போல, பிறி்தோர் உயிரின்
உடலைச்  சுவைபட  உண்டவர்  மனம்  அவ்வூனையே  நோக்குவது
அல்லது அருளை நோக்காது. சுவைபட உண்டல், காயங்களான் இனிய
சுவைத்து  ஆக்கி  உண்டல்.  இதனான்  ஊன் தின்றார் மனம் தீங்கு
நினைத்தல் உவம அளவையால் சாதித்து, மேலது வலியுறுத்தப்பட்டது.
அருளல்ல  தியாதெனில்  கொல்லாமை கோறல் பொருளல்ல தவ்வூன்
தினல்.  அருள்  யாது  எனின், கொல்லாமை : அருள் அல்லது யாது
எனின்  கோறல்:  அவ்வூன்  தினல்  பொருள்  அல்லது - ஆகலான்
அக்கோறலான்  வந்த  ஊனைத்  தின்கை  பாவம்.  உபசாரவழக்கால்
''கொல்லாமை, கோறல்'' ஆகிய காரியங்களை ''அருள் அல்லது''  எனக்
கார