திருக்குறள்
ஓலை எண் :   90

Zoom In NormalZoom Out

னால் பயன்  இல்லை  ஆகலின்,  கொல்லாமையும்  உடன் கூறினார்.
இப்பேரருள்  உடையான் மறுமைக்கண் தேவரின் மிக்கான் ஆம் என
அப்  பயனது  பெருமை கூறியவாறு. இவை மூன்று பாட்டானும் ஊன்
உண்ணாமையது உயர்ச்சி கூறப்பட்டது. அஃதாவது, மனம் பொறி வழி
போகாது   நிற்றற்   பொருட்டு   விரதங்களான்  உண்டி  சுருக்கலும்,
கோடைக்கண்  வெயில்நிலை  நிற்றலும், மாரியினு பனியினும் நீர்நிலை
நிற்றலும்   முதலிய   செயல்களை  மேற்கொண்டு,  அவற்றால்  உம்
உயிர்க்கு   வரும்   துன்பங்களைப்   பொறுத்துப்  பிற  உயிர்களை
ஓம்புதல்,புலான்   மறுத்து   உயிர்கண்மேல்   அருள்   முதிர்ந்துழிச்
செய்யப்படுவது     ஆகலின்,    இது    புலால்    மறுத்தலின்பின்
வைக்கப்பட்டது.  உற்றநோய்  நோன்றல்  உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே   தவத்திற்   குரு.   தவத்தின்   வடிவு;   உண்டி  சுருக்கல்
முதலியவற்றால்  தம்  உயிர்க்கு  வரும் துன்பங்களைப் பொறுத்தலும்,
தாம் பிற உயிர்கட்குத் துன்பம் செய்யாமையும் ஆகிய அவ்வளவிற்று
மற்றுள்ளன  எல்லாம்  இவற்றுள்ளே அடங்குதலின், ''அற்றே,'' எனத்
தேற்றேகாரம்   கொடுத்தார்.   ''தவத்திற்கு   உரு  அற்று''  என்பது,
''யானையது  கோடு  கூரிது'' ''என்பதனை,'' யானைக்குக் கோடு கூரிது,
என்றாற்போல  ஆறாவதன்  பொருட்கண்  நான்காவது வந்த மயக்கம்
இதனால்    தவத்தினது    இலக்கணம்    கூறப்பட்டது.    தவமும்
தவமுடையார்க்  காகும்  அவம்அதனை  அஃதிலார் மேற்கொள் வது.
பயனே  அன்றித் தவந்தானும் உண்டாவது முன்தவம் உடையார்க்கே,
ஆகலான்,  அத்தவத்தை அம்முன்தவம் இல்லாதார்  முயல்வது பயன்
இல் முயற்சியாம். பரிசயத்தால் அறிவும் ஆற்றலும் உடையராய் முடிவு
போக்கலின்,   ''தவம்   உடையார்க்கு   ஆகும்''   என்றும்,  அஃது
இல்லாதார்க்கு அவை இன்மையான் முடிவு போக்கா