மயக்க நூல்களைத் தெளிந்து,
அவற்றிற்கு ஏற்ப ஒழுகுதல். ஞானத்திற்கு ஏதுவாய மெய்ந்நூற்பொருளையேனும், ஆசிரியனை வழிபட்டன்றி அவனை வஞ்சித்துக்கொள்ளின் அதுவும் களவாம் ஆகலின், ''எனைத்து ஒன்றும்'' என்றார். ''நெஞ்சு கள்ளாமல் காக்க'' எனவே, துறந்தார்க்கு விலக்கப்பட்ட கள்ளுதல் கள்ளக் கருதுதல் என்பது பெற்றாம். உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல். குற்றங்களைத் தம் நெஞ்சால் கருதுதலும் துறந்தார்க்குப் பாவம், ஆதலால், பிறனொருவன் பொருளை அவன் அறியா வகையால் வஞ்சித்துக் கொள்வோம் என்று கருதற்க. ''உள்ளத்தால்'' என வேண்டாது கூறினார், அவர் உள்ளம் ஏனையோர் உள்ளம் போலாது சிறப்புடைத்து
என்பது முடித்தற்கு. உள்ளலும் என்பது இழிவு சிறப்பு உம்மை. ''அல்''
விகுதி வியங்கோள் ''எதிர்மறைக்கண்'' வந்தது. இவை இரண்டு பாட்டானும் இந்நடைக்குக் களவாவது இஃது என்பதூஉம் அது கடியப்படுவது என்பதூஉம் கூறப்பட்டன. கனவினால் ஆகிய ஆக்கம் அளவிறந் தாவது போலக் கெடும். களவினால் உளதாகிய பொருள், வளர்வது போலத் தோன்றித் தன் எல்லையைக் கடந்து கெடும். ஆக்கத்திற்கு ஏதுவாகலின் ''ஆக்கம்'' எனப்பட்டது. எல்லையைக் கடந்து கெடுதலாவது, தான் போங்கால் பாவத்தையும் பழியையும் நிறுத்திச்
செய்த அறத்தையும் உடன்கொண்டு போதல். ''அளவு அறிந்து அவ்வளவிற்கு உதவாது கெடும்'' என்று உரைப்பாரும் உளர். களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் வீயா விழுமம் தரும். பிறர் பொருளை வஞ்சித்துக் கோடற்கண்ணே மிக்க வேட்கை, அப்பொழுது இனிதுபோலத் தோன்றித் தான் பயன் கொடுக்கும் பொழுது தொலையாத இடும்பையைக் கொடுக் |