திருக்குறள்
ஓலை எண் :   100

Zoom In NormalZoom Out

கும்.   கன்றுதலான்   எஞ்ஞான்றும்   அக்களவையே   பயில்வித்து
அதனால்  பாவமும் பழியும் பயந்தே விடுதலின் வீயா விழுமம் தரும்
என்றார்.  இவை இரண்டு பாட்டானும் அது கடியப்படுதற்குக் காரணம்
கூறப்பட்டது.   அருள்கருதி  அன்புடையர்  ஆதல்  பொருள்கருதிப்
பொச்சாப்புப்  பார்ப்பார்கண்  இல். அருளினது உயர்ச்சியை அறிந்து
அதன்மேல்  அன்புடையராய் ஒழுகுதல், பிறர் பொருளை வஞ்சித்துக்
கொள்ளக்   கருதி  அவரது  சோர்வு  பார்ப்பார்மாட்டு உண்டாகாது.
தமக்கு  உரிய  பொருளையும்  அதனது  குற்றம்  நோக்கித்  துறந்து
போந்தவர்,  பின்  பிறர்க்கு உரிய பொருளை நன்கு மதித்து, அதனை
வஞ்சித்துக்  கோடற்கு  அவரது  சோர்வு பார்க்கும் மருட்சியரானால்,
அவர்மாட்டு,  உயிர்கள்மேல்  அருள்  செய்தல் நமக்கு உறுதி என்று
அறிந்து  அவ்வருளின் வழுவாது ஒழுகும் தெருட்சிகூடாது என்பதாம்.
அளவின்கண்  நின்றொழுகல்  ஆற்றார்  களவின்கண்  கன்றிய  காத
லவர்.  உயிர்  முதலியவற்றை  அளத்தலாகிய  நெறியின்கண்  நின்று
அதற்கு  ஏற்ப  ஒழுகமாட்டார், களவின் கண்ணே மிக்க வேட்கையை
உடையார்.  உயிர்  முதலியவற்றை  அளத்தலாவது,  காட்சி முதலாகச்
சொல்லப்பட்ட   அளவைகளான்   உயிர்ப்  பொருளையும்,  அதற்கு
அநாதியாய் வருகின்ற நல்வினை தீவினைக்கு  உற்ற விளைவுகளையும்
அவற்றான்  அது  நாற்கதியுள்  பிறந்து  இறந்து  வருதலையும், அது
செய்யாமல்       அவற்றைக்       கெடுத்தற்கு      உபாயமாகிய
யோகஞானங்களையும்,   அவற்றான்  அஃது  எய்தும்  வீட்டினையும்
அளந்து  உள்ளவாறு  அறிதல்.  இதனை  ஆருகதர் தருமத்தியானம்
என்ப.  அதற்கு  ஏற்ப  ஒழுகுதலாவது,  அவ்வளக்கப்பட்டனவற்றுள்
தீயனவற்றின்  நீங்கி நல்லனவற்றின் வழி நிற்றல். களவென்னும் காரறி
வாண்மை