அளவென்னும் ஆற்றல்
புரிந்தார்கண் இல். களவு என்று சொல்லப்படுகின்ற இருண்ட அறிவினை உடையராதல்; உயிர் முதலியவற்றை அளத்தல் என்னும் பெருமையை
விரும்பினார்கண் இல்லை. இருள் - மயக்கம். காரியத்தைக் காரணமாக உபசரித்துக் ''களவென்னும் கார் அறிவு ஆண்மை'' என்றும், காரணத்தைக் காரியமாக்கி ''அளவு என்னும் ஆற்றல்'' என்றும் கூறினார். களவும் துறவும், இருளும் ஒளியும் போலத் தம்முள் மாறாகலின், ஒருங்கு நில்லா என்பது இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது. அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும் களவறிந்தார் நெஞ்சில் கரவு. அவ்வளத்தலையே பயின்றவர் நெஞ்சத்து அறம் நிலை பெற்றாற்போல நிலைபெறும், களவையே பயின்றவர் நெஞ்சத்து வஞ்சனை. உயிர் முதலியவற்றை அளந்தறிந்தார்க்குத் துறவறம் சலியாது நிற்கும் என்பது இவ்வுவமையால் பெற்றாம். களவோடு மாறின்றி நிற்பது இதனால் கூறப்பட்டது. அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல மற்றைய தேற்றா தவர். அவ்வளவல்லாத தீய நினைவுகளை நினைத்த பொழுதே கெடுவர், களவு அல்லாத பிறவற்றை
அறியாதவர். தீய நினைவுகளாவன:
பொருளுடையாரை
வஞ்சிக்குமாறும், அவ்வஞ்சனையால் அது கொள்ளுமாறும்,
கொண்ட அதனால் தாம் புலன்களை நுகருமாறும் முதலாயின. நினைத்தலும் செய்தலாகலின், ''செய்து'' என்றும், அஃது உள்ள அறங்களைப் போக்கி, கரந்த சொற் செயல்களைப் புகுவித்து அப்பொழுதே கெடுக்கும் ஆகலின் ஆங்கே வீவர்'' என்றும் கூறினார். மற்றையாவன: துறந்தார்க்கு உணவாக ஓதப்பட்ட காய்,
கனி, கிழங்கு சருகு முதலாயினவும், இல்வாழ்வார் செய்யும் தானங்களுமாம். தேற்றாமை: அவற்றையே நுகர்ந்து அவ்வளவால் நிறைந்திருத்தலை அறியாமை. இதனாற் கள்வார் கெடுமாறு
கூறப்பட்டது. கள்வார்க்குத்
தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத் |