திருக்குறள்
ஓலை எண் :   102

Zoom In NormalZoom Out

தள்ளாது  புத்தே   ளுலகு.   களவினைப்   பயில்வார்க்குத்  தம்மின்
வேறல்லாத  உடம்பும்  தவறும்,  அது செய்யாதார்க்கு நெடுஞ்சேணது
ஆகிய  புத்தேள்  உலகும்  தவறாது.  உயிர்  நிற்றற்கு இடனாகலின்,
உயிர்நிலை  எனப்பட்டது.  சிறப்பு உம்மைகள் இரண்டும் விகாரத்தால்
தொக்கன.   இம்மையினும்   அரசனால்   ஒறுக்கப்படுதலின்,  ''உயிர்
நிலையும்  தள்ளும்''  என்றும்,  மறுமையினும்  தேவராதல் கூடுதலின்
''புத்தேள்  உலகும்  தள்ளாது'' என்றும் கூறினார். ''மற்றது  தள்ளினும்
தள்ளாமை     நீர்த்து''    குறள்.566    என்புழியும்     ''தள்ளுதல்''
இப்பொருட்டாதல்  அறிக.  இதற்குப்  பிறவாறு  உரைப்பாரும் உளர்.
இதனான்   இருவர்   பயனும்   ஒருங்கு  கூறப்பட்டது.  அஃதாவது
மெய்யினது  தன்மை.  பெரும்பான்மையும் காமமும்  பொருளும் பற்றி
நிகழ்வதாய  பொய்ம்மையை  விலக்கலின்,  இது    ''கூடா ஒழுக்கம்'',
''கள்ளாமை''  களின்  பின்  வைக்கப்பட்டது.  வாய்மை   எனப்படுவ
தியாதெனின்  யாதொன்றும் தீமை இலாத சொலல். மெய்ம்மை  என்று
சிறப்பித்துச்   சொல்லப்படுவது   யாது   என்று   வினவின்,   அது
பிறிதோருயிர்க்குத்  தீங்கு  சிறிதும் பயவாத சொற்களைச் சொல்லுதல்.
''தீமை  யாதொன்றும் இலாத'' என இயையும். ''எனப்படுவது''  என்பது
''ஊர்  எனப்படுவது  உறையூர்''  என்றாற்  போல நின்றது. இதனான்
நிகழ்ந்தது   கூறல்   என்பது  நீக்கப்பட்டது.  அது  தானும்,  தீங்கு
பயவாதாயின்  மெய்ம்மையாம்:  பயப்பின்  பொய்ம்மையாம்  என்பது
கருத்து.   பொய்ம்மையும்   வாய்மை  இடத்த  புரைதீர்ந்த  நன்மை
பயக்கும்  எனின் புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின் -  பிறர்க்குக்
குற்றம்  தீர்ந்த நன்மையைப் பயக்குமாயின், பொய்ம்மையும்  வாய்மை
இடத்த  -  பொய்ம்மைச் சொற்களும் மெய்ம்மைச் சொற்களின்  பால
ஆம்.  குற்றம்  தீர்ந்த  நன்மை:   அறம்.  அதனைப்  பயத்தலாவது,
கேடாதல்  சாக்காடாதல்  எய்த  நின்றதோர்  உயிர், அச்சொற்களின்
பொய்ம்மையானே  அதனின்  நீங்கி  இன்புறுதல். நிகழாதது கூறலும்,
நன்மை  பயவாதாயின், பொய்ம்மையாம், பயப்பின், மெய்ம்மையானே
என்பது கருத்து. இவை இரண்டு பாட்டானும் ''தீங்கு