திருக்குறள்
ஓலை எண் :   117

Zoom In NormalZoom Out

எய்துவர்      என்பதாம்.    உயிருடம்பின்     நீக்கியார்    என்ப
செயிர்உடம்பின்  செல்லாத்தீ  வாழ்க்கை  யவர். நோக்கலாகா  நோய்
உடம்புடனே    வறுமை   கூர்ந்த   இழிதொழில்   வாழ்க்கையினை
உடையாரை,  இவர்  முற்பிறப்பின்  கண்  உயிர்களை  அவை நின்ற
உடம்பினின்றும்  நீக்கினவர் என்று சொல்லுவர் வினை விளைவுகளை
அறிந்தோர்.  செல்லா  வாழ்க்கை தீ வாழ்க்கை எனக் கூட்டுக. செயிர்
உடம்பினராதல்,  அக்கே  போல் அங்கை யொழிய விரல் அழுகித் -
துக்கத்  தொழுநோய்  எழுபவே  நாலடி  123  என்பதனாலும் அறிக.
மறுமைக்  கண் இவையும் ' 133 'எய்துவர் என்பதாம். இவை  இரண்டு
பாட்டானும்   கொல்வார்க்கு   வரும்  தீங்கு  கூறப்பட்டது.   அருள்
உடைமை  முதல்  கொல்லாமை ஈறாகச் சொல்லப்பட்ட  இவற்றுள்ளே
சொல்லப்படாத    விரதங்களும்    அடங்கும்;    அஃது   அறிந்து
அடக்கிக்கொள்க. ஈண்டு உரைப்பின் பெருகும். இனி அவற்றின் பயன்
ஆகிய  ஞானம்  கூறிய  தொடங்கினார்.ஞானமானது  வீடு  பயக்கும்
உணர்வு.  அது  ''நிலையாமை''  முதல்  ''அவாஅறுத்தல்''  இறுதியாக
நான்கு              அதிகாரத்துள்              அடக்கப்பட்டது.
அவற்றுள், நிலையாமையாவது; தோற்றம்  உடையனயாவும் நிலையுதல்
இலவாம்     தன்மை.    மயங்கியவழிப்பேய்தேரில்    புனல்போலத்
தோன்றி, மெய்யுணர்ந்தவழிக்கயிற்றில் அரவுபோலக்கெடுதலின்  பொய்
என்பாரும், நிலை  வேறுபட்டு   வருதலால்   கணந்தோறும்  பிறந்து
இருக்கும்   என்பாரும், ஒருவாற்றான்  வேறுபடுதலும்   ஒருவாற்றான்
வேறுபடாமையும்   உடைமையின்,   நிலையுதலும்   நிலையாமையும்
ஒருங்கேயுடைய என்பாரும் எனப்