திருக்குறள்
ஓலை எண் :   119

Zoom In NormalZoom Out

இயல்பிற்றுச்  செல்வம்   அதுபெற்றால்  அற்குப   ஆங்கே  செயல்.
நில்லாத   இயல்பினையுடைத்துச்   செல்வம்,   அதனைப்  பெற்றால்
அதனால்  செய்யப்படும்  அறங்களை  அப்பெற்ற  பொழுதே செய்க.
''அல்கா''  என்பது  திரிந்து நின்றது. ஊழுள்ளவழியல்லது துறந்தாரால்
பெறப்படாமையின்,   அது   பெற்றால்   என்றும்   அஃது  இல்வழி
நில்லாமையின்  ''ஆங்கே'' என்றும் கூறினார். அதனால் செய்யப்படும்
அறங்களாவன:  பயன்  நோக்காது  செய்யப்படும்  கடவுட்  பூசையும்,
தானமும்   முதலாயின.  அவை  ஞான  ஏதுவாய்  வீடு  பயத்தலின்
அவற்றை  ''அல்குப''  என்றும்  ''செயல்''  என்றும் கூறினார்.  இவை
இரண்டு  பாட்டானும்  செல்வம்  நிலையாமை கூறப்பட்டது. நாள்என
ஒன்றுபோல்  காட்டி  உயிர்ஈரும  வாள  துணர்வார்ப்  பெறின். நாள்
என்று  அறுக்கப்படுவதொருகாலவரையறைபோலத்  தன்னைக்  காட்டி
ஈர்ந்து  செல்கின்ற  வாளினது  வாயது  உயிர், அஃது உணர்வாரைப்
பெறின்.   காலம்   என்னும்   அருவப்பொருள்  உலகியல்  நடத்தற்
பொருட்டு   ஆதித்தன்   முதலிய   அளவைகளால்   கூறுபட்டதாக
வழங்கப்படுவதல்லது,    தானாகக்   கூறுபடாமையின்,   நாள்   என
ஒன்றுபோல்  என்றும்  அது தன்னை வாள் என்று உணரமாட்டாதார்
தமக்குப்   பொழுது   போகாநின்றது  என்று  இன்புறுமாறு  நாளாய்
மயக்கலின்   ''காட்டி''  என்றும்  இடைவிடாது  ஈர்தலான்  ''வாளின்
வாயது''   என்றும்,   அஃது   ஈர்கின்றமையை  உணர்வார்  அரியர்
ஆகலின்  உணர்வார்ப்  பெறின்  என்றும்  கூறினார். உயிர் என்னும்
சாதியொருமைப்  பெயர்  ஈண்டு உடம்பின்மேல் நின்றது. ஈரப்படுவது
அதுவேயாகலின்.  வாள்  என்பது  ஆகுபெயர்.  இனி  இதனை நாள்
என்பதொரு  பொருள்போலத்  தோன்றி  உயிரை ஈர்வதொருவாளாம்
என்று உரைப்பாரும் உளர்: ''என''