மாறும் அதற்குப் பொருள் துணைக்காரணம் ஆமாறும், அது தம் முயற்சிகளான் வருமாறும், அவற்றைத் தாம் முயலுமாறும், அவற்றிற்கு வரும் இடையூறுகளும் அவற்றை நீக்குமாறும் நீக்கி அப்பொருள் கடைக் கூட்டுமாறும், அதனைப் பிறர் கொள்ளாமல் காக்குமாறும், அதனால் நட்டாரை ஆக்குமாறும், நள்ளாரை அழிக்குமாறும் தாம் அவ்வின்பங்கள் நுகருமாறும் முதலாயின. அறிவிலாரது இயல்பின் மேல் வைத்து நிலையாமை கூறியவாறு. இனிக் ''கருதுப''
என்பதனை அஃறிணைப் பன்மைப் பெயராக்கி
உரைப்பாரும் உளர். குடம்பை தனித்தொழியப்
புள்பறந் தற்றே உடம்போ டுயிரிடை
நட்பு. முன் தனியாத முட்டை தனித்துக் கிடப்ப அதனுள் இருந்த புள்ளுப் பருவம் வந்துழிப் பறந்து போன தன்மைத்து; உடம்பிற்கும் உயிர்க்கும் உளதாய நட்பு. ''தனித்துஒழிய'' என்றதனான் முன் தனியாமை பெற்றாம். அஃதாவது, கருவும் தானும்ஒன்றாய்ப் பிறந்து வேறாம் துணையும் அதற்கு ஆதாரமாய்நிற்றல் அதனால் அஃது உடம்பிற்கு உவமையாயிற்று; அதனுள் வேற்றுமையின்றி நின்றே பின் புகாமல் போகலின், புள்உயிர்க்கு உவமையாயிற்று. முட்டையுள் பிறப்பன பிறவும்உளவேனும், புள்ளையே கூறினார், பறந்து போதல் தொழிலான் உயிரோடு ஒப்புமை எய்துவது அதுவே யாகலின். ''நட்பு''என்பது ஈண்டுக் குறிப்பு மொழியாய்
நட்பின்றிப்போதல் உணர்த்தி நின்றது. சேதனமாய்
அருவாய்நித்தமாய உடம்பும் தம்முள்
மாறாகலின், வினைவயத்தால்கூடியதல்லது
நட்பில என்பது அறிக.
இனி, ''குடம்பை'' என்பதற்குக்கூடு
என்று உரைப்பாரும் உளர்; அது புள்ளுடன்தோன்றாமையானும், அதன் கண் அது மீண்டு புகுதல்உடைமையானும், உடம்பிற்கு உவமையாகாமை அறிக. உறங்கு வதுபோலும் சாக்கா டுறங்கி விழிப்பது போலும் பிறப்பு. ஒருவனுக்குச் சாக்காடு வருதல் உறக்கம் வருதலோடு ஒக்கும், அதன்பின் பிறப்பு வருதல் |