உறங்கி விழித்தல் வருதலோடு
ஒக்கும். உறங்குதலும் விழித்தலும் உயிர்கட்கு இயல்பாய்க் கடிதின் மாறிமாறி வருகின்றாற் போலச் சாக்காடும் பிறப்பும் இயல்பாய்க் கடிதின் மாறிமாறி வரும்
என்பது கருத்து. நிலையாமையே நிலைபெற்றவாறு அறிவித்தற்குப் பிறப்பும் உடன் கூறப்பட்டது. புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில்
இருந்த உயிர்க்கு. வாதம்
முதலியவற்றின் இல்லாய உடம்புகளுள்
ஒதுக்கிருந்தே போந்த
உயிர்க்கு, எஞ்ஞான்றும் இருப்பதோர்
இல் இதுகாறும் அமைந்ததில்லை போலும்! அந்நோய்கள் இருக்க அமைந்த ஞான்று இருந்தும், வெகுண்ட ஞான்று போயும் ஓர் உடம்பினுள் நிலைபெறாது வருதலால், ''துச்சில் இருந்த'' என்றார். பின் புறப்படாது புக்கேவிடும் இல் அமைந்ததாயின்,பிறர் இல்களுள் துச்சிலிராது
என்பதாம், ஆகவே உயிரோடுகூடி நிற்பதோர்
உடம்பும் இல்லை என்பது பெறப்பட்டது.
இவைஏழு பாட்டானும், முறையே யாக்கைகட்கு வரைந்த நாள்கழிகின்றவாறும், கழிந்தால்
உளதாய நிலையாமையும், அவைஒரோவழிப் பிறந்த அளவிலே இறத்தலும், ஒரு கணமாயினும் நிற்கும்என்பது தெளியப்படாமையும், உயிர்
நீங்கிய வழிக்கிடக்குமாறும், அவற்றிற்கு இறப்பும் பிறப்பும் மாறி மாறிவருமாறும் அவைதாம் உயிர்க்குரிய
அன்மையும் என்று,இவ்வாற்றால் யாக்கை நிலையாமை கூறியவாறு கண்டுகொள்க. அஃதாவது, புறமாகிய செல்வத்தின்கண்ணும் அகமாகிய யாக்கையின்கண்ணும் உளதாம் பற்றினை, அவற்றது நிலையாமை நோக்கி, விடுதல், அதிகார முறைமையும் இதனானே விளங்கும். யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன். ஒருவன் யாதொரு பொருளின் யாதொரு பொருளின் நீங்கினான், அவன் அப்பொருளால் வரும் |