தியக் கண்ணும் பயம்இன்றே
மெய்யுணர் வில்லா தவர்க்கு. சொல்லப்படுகின்ற புலன்கள்
வேறுபாட்டான் ஐந்தாகிய உணர்வு அவற்றை
விட்டுத் தம் வயத்ததாய
வழியும், அதனால் பயனில்லையேயாம்,
மெய்யினையுணர்தல் இல்லாதார்க்கு. ஐந்தாகிய உணர்வு:
மனம், அஃது எய்துதலாவது, மடங்கி ஒரு
தலைப்பட்டுத் தாரணைக்கண் நிற்றல். அங்ஙனம் நின்ற வழியும் வீடு பயவாமையின் ''பயம் இன்று'' என்றார். சிறப்பு உம்மை எய்துதற்கு
அருமை விளக்கி நின்றது. இவை இரண்டு பாட்டானும் மெய்யுணர்வு உடையார்க்கே வீடு உளது
என மெய் உணர்வின் சிறப்புக்
கூறப்பட்டது. எப்பொருள் எத்தன்மைத் தாயினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. யாதொரு பொருள் யாதோர் இயல்பிற்றாய்த் தோன்றினும், அத்தோன்றிய ஆற்றைக் கண்டொழியாது, அப்பொருளின்கண் நின்று மெய்யாகிய பொருளைக் காண்பதே
மெய் உணர்வாவது. பொருள் தோறும் உலகத்தார்
கற்பித்துக்கொண்டு வழங்குகின்ற கற்பனைகளைக் கழித்து, நின்ற உண்மையைக் காண்பது என்றவாறாயிற்று. அஃதாவது கோச்சேரமான் யானைக் கட்சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்றவழி. அரசன் என்பதோர்
சாதியும் சேரமான் என்பதொரு குடியும், வேழ
நோக்கினையுடையான் என்பதோர் வடிவும், சேய் என்பதோர்
இயற்பெயரும், மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்பதோர் சிறப்புப் பெயரும், ஒரு பொருளின்
கண் கற்பனை ஆகலின், அவ்வாறு
உணராது, நிலம் முதல் உயிர் ஈறாகிய
தத்துவங்களின் தொகுதி என உணர்ந்து,
அவற்றை நிலம் முதலாகத் தத்தம் காரணங்களுள்
ஒடுக்கிக் கொண்டுசென்றால்,
காரணகாரியங்கள் இரண்டும் இன்றி
முடிவாய்நிற்பதனை உணர்தலாம். ''எப்பொருள்'' என்ற
பொதுமையான்,இயங்குதிணையும் நிலைத்திணையும்
ஆகிய பொருள்கள்எல்லாம் இவ்வாறே
உணரப்படும். இதனான் மெய் உணர்வினது
இலக்கணம் கூறப்பட்டது. கற்றீண்டு
மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி. இம்மக்கட் பிறப்பின் கண்ணே உபதேச மொழிகளை அனுபவம் உடைய தேசிகர்பால் கேட்டு அதனான் மெய்ப்பொருளை உணர்ந்தவர், மீண்டு இப்பிறப்பின்கண் வாராத நெறியை எய்துவர். ''கற்று''
என்றதனால் பலர்பக்கலினும் பலகாலும் பயிறலும், ''ஈண்டு''
என்றதனால் வீடுபேற்றிற்குரிய மக்கட்பிறப்பினது பெறுதற்கு அருமையும்
பெற்றாம். ஈண்டுவாரா நெறி: வீட்டு நெறி. வீட்டிற்கு நிமித்த காரணமாய முதற்பொருளை உணர்தற்கு உபாயம் மூன்று: அவை
கேள்வி, விமரிசம், பாவனை என்பன. அவற்றுள் கேள்வி
இதனால் கூறப்பட்டது. ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு. அங்ஙனம் கேட்ட உபதேச
மொழிப் பொருளை, ஒருவன் உள்ளம் அளவைகளானும்
பொருந்துமாற்றானும் தெளிய ஆராய்ந்து அதனான் முதற்பொருளை
உணருமாயின், அவனுக்கு மாறிப் பிறப்புளதாக
நினைக்க வேண்டா. ''ஒருதலையா ஓர்த்து''
என இயையும். அளவைகளும் பொருந்தும்
ஆறும் மேலே உரைத்தாம். இதனான் விமரிசம்
கூறப்பட்டது. |