திருக்குறள்
ஓலை எண் :   129

Zoom In NormalZoom Out

பிறப்பென்னும்     பேதைமை  நீங்கச்  சிறப்பென்னும்  செம்பொருள்
காண்ப  தறிவு. பிறப்பிற்கு முதற்காரணமாய அவிச்சை கெட, வீட்டிற்கு
நிமித்த காரணமாய செவ்விய பொருளைக் காண்பதே ஒருவர்க்கு மெய்
உணர்வாவது.  பிறப்பென்னும்  பேதைமை  எனவும்  ''சிறப்பு என்னும்
செம்பொருள்''   எனவும்,   காரியத்தைக்   காரணமாக   உபசரித்தார்.
ஐவகைக்  குற்றங்களுள் அவிச்சை ஏனைய நான்கிற்கும்  காரணமாதல்
உடைமையின்,    அச்சிறப்புப்   பற்றி   அதனையே    பிறப்பிற்குக்
காரணமாகக் கூறினார்.