திருக்குறள்
ஓலை எண் :   139

Zoom In NormalZoom Out

ன''  தொல்.  சொல்    59    என்பதனான்    உயர்திணையாயிற்று.
படையாதார்க்கேயன்றிப்   படைத்தார்க்கும்  என்றமையால்,  உம்மை
எச்ச   உம்மை.   வெறும்முயற்சிகளாற்  பொருள்களைப்  படைத்தல்
அல்லது  நுகர்தல்  ஆகாது,  அதற்கு ஊழ் வேண்டும் என்பதாயிற்று.
துறப்பார்மன்  துப்புர  வில்லார்  உறற்பால  ஊட்டா  கழியும் எனின்.
வறுமையான்   நுகர்ச்சி   இல்லாதார்   துறக்கும்  கருத்துடையராவர்,
ஊழ்கள்  உறுதற்பாலவாய  துன்பங்களை  உறுவியாது  ஒழியுமாயின்.
''துறப்பார்''  என்பது  ஆர்ஈற்று  எதிர்கால  முற்றுச்சொல்.   தம்மால்
விடப்பெறுவன  தாமே விடப்பெற்று வைத்தும், கருத்து வேறுபாட்டால்
துன்பமுறுகின்றது  ஊழின் வலியான் என்பது எஞ்சி நிற்றலின்,  ''மன்''்
ஒழியிசைக்கண்    வந்தது.    நன்றாங்கால்   நல்லவாக்   காண்பவர்
அன்றாங்கால்  அல்லற்  படுவ  தெவன்.  நல்வினை  விளையுங்கால்,
அதன்  விளைவாய இன்பங்களைத் துடைக்கும் திறன் நாடாது,  இவை
நல்ல    என்று    இயைந்து   அனுபவிப்பார்,   ஏனைத்   தீவினை
விளையுங்கால்   அதன்   விளைவாய   துன்பங்களையும்  அவ்வாறு
அனுபவியாது, துடைக்கும் திறன் நாடி அல்லல் உழப்பது என்  கருதி?
தாமே  முன் செய்து கொண்டமையானும், ஊட்டாது  கழியாமையானும்,
இரண்டும் இயைந்து அனுபவிக்கற்பால, அவற்றுள் ஒன்றிற்கு இயைந்து
அனுபவித்து,  ஏனையதற்கு  அது  செய்யாது  வருந்துதல் அறிவன்று
என்பதாம்.   இவை   மூன்று   பாட்டானும்   இன்பத்துன்பங்கட்குக்
காரணமாய  ஊழின்  வலி  கூறப்பட்டது.  ஊழின் பெருவலி யாவுள?
மற்றொன்று   சூழினும்   தான்முந்   துறும்.   தன்னை   விலக்குதற்
பொருட்டுத்  தனக்கு  மறுதலையாவதோர்  உபாயத்தைச்    சூழினும்,
தான்   அவ்வுபாயமேயானும்   பிறிதொன்றானும்   வழியாக   வந்து
அச்சூழ்ச்சியின்   முற்பட்டு   நிற்கும்,  அதனால்  ஊழ்போல  மிக்க
வலியுடையன  யாஉள  -  அதனால்  ஊழ்போல மிக்க வலியுடையன
யாவை  உள?  ''பெருவலி''  ஆகுபெயர். சூழ்தல். பலருடனும் பழுதற
எண்ணுதல்.   செய்தற்கே   அன்றிச்  சூழ்தற்கும்  அவதி  கொடாது
என்றமை