முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட் கிறைஎன்று வைக்கப் படும். தான் முறை செய்து பிறர் நலியாமற் காத்தலையும் செய்யும் அரசன், பிறப்பான் மகனேயாயினும், செயலான் மக்கட்குக் கடவுள் என்று வேறு வைக்கப்படும். முறை: அறநூலும் நீதிநூலும் சொல்லும் நெறி. ''பிறர்''் என்றது மேற்சொல்லியாரை. வேறு வைத்தல்: மக்களிற் பிரித்து உயர்த்து வைத்தல். செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு. இடிக்கும் துணையாயினார் சொற்களைத் தன் செவி பொறாதாகவும். விளைவுநோக்கிப்
பொறுக்கும் பண்புடைய அரசனது, குடைநிழற்
கண்ணே தங்கும் உலகம். ''செவி கைப்ப'' என்றதற்கு
ஏற்ப, இடிக்குந் துணையாயினார்
என்பது வருவிக்கப்பட்டது. நாவின்
புலத்தைச் செவிமேல் ஏற்றிக் ''கைப்ப'' என்றார்.
பண்பு உடைமை: விசேட உணர்வினராதல்.
அறநீதிகளில் தவறாமையின், மண் முழுதும்
தானே ஆளும் என்பதாம். கொடைஅளி
செங்கோல் குடிஓம்பல்
நான்கும் உடையான் ஆம்வேந்தர்க கொளி. வேண்டுவார்க்கு வேண்டுவன கொடுத்தலும், யாவர்க்கும் தலையளி செய்தலும், முறை செய்தலும்,
தளர்ந்த குடிகளைப் பேணலும் ஆகிய, இந்நான்கு செயலையும்
உடையான், வேந்தர்க்கு எல்லாம் விளக்கு
ஆம். தலையளி - முகம் மலர்ந்து இனிய
கூறல், செவ்விய கோல்போறலின், ''செங்கோல்''
எனப்பட்டது. ''குடி ஓம்பல்'' எனஎடுத்துக் கூறியமையால், தளர்ச்சி
பெற்றாம். அஃதாவது,ஆறில் ஒன்றாய பொருள் தன்னையும் வறுமை
நீங்கிய |