திருக்குறள்
ஓலை எண் :   145

Zoom In NormalZoom Out

வழிக்    கொள்ளல்வேண்டின்,   அவ்வாறு   கோடலும்,   இழத்தல்
வேண்டின்இழத்தலும்    ஆம்.    சாதி    முழுதும்    விளக்கலின்,
''விளக்கு''என்றார்.  ஒளி  -  ஆகுபெயர்.  இவை  ஐந்து பாட்டானும்
மாட்சியும்பயனும் உடன் கூறப்பட்டன. அஃதாவது,  அவ்வரசன் தான்
கற்றற்குரிய   நூல்களைக்    கற்றல்,   அவையாவன,    அறநூலும்,
நீதிநூலும்,  யானை   குதிரை   தேர்படைக்கலம்   என்ற  இவற்றின்
நூல்களும்   முதலாயின.    அரசன்    அறிவுடையன்   ஆயக்கால்
தன்னுயிர்க்கே  அன்றி  மன்னுயிர்க்கும் பயன்படுதல் நோக்கி,  இஃது
அரசியலுள்  வைக்கப்பட்டதாயினும் பொதுப்படக் கூறுகின்றார்.  மேல்
''  தூங்காமை  கல்வி  ''  குறள்.   383  எனத்  தோற்றுவாய் செய்த
மாட்சியை  விரித்துக்  கூறுகின்றமையின்,   இஃது  இறை  மாட்சியின்
பின்  வைக்கப்பட்டது.   கற்க   கசடறக்  கற்பவை  கற்றபின்  நிற்க
அதற்குத்   தக  ஒருவன்  கற்கப்படும்  நூல்களைப்  பழுதறக்  கற்க,
அங்ஙனம்   கற்றால்,   அக்கல்விக்குத்   தக  அவை  சொல்லுகின்ற
நெறிக்கண்ணே   நிற்க.  ''கற்பவை''  என்றதனான்,  அறம்  பொருள்
இன்பம்  வீடு  என்னும் உறுதிப்பொருள் உணர்த்துவன அன்றிப்  பிற
பொருள்  உணர்த்துவன, சின்னாள் பல்பிணிச் சிற்றறிவினர்க்கு  ஆகா
என்பது  பெற்றாம்.  கசடறக்  கற்றலாவது:  விபரீத  ஐயங்களை நீக்கி
மெய்ப்பொருளை    நல்லோர்    பலருடனும்   பலகாலும்   பயிறல்.
நிற்றலாவது: இல்வாழ்வுழிக் ''கருமமும் உள்படாப் போகமும் துவ்வாத்,
தருமமும் தக்கார்க்கே செய்த''லினும் நாலடி. 250துறந்துழித்  தவத்தான்
மெய் உணர்ந்து அவா அறுத்தலினும்