நின்றும் கற்றார் தலையாயினார். அந்நிலைக்கு
நாணிக் கல்லாதவர் எஞ்ஞான்றும் இழிந்தாரேயாவர். உடையார், இல்லார் என்பன உலகவழக்கு. ஏக்கறுதல் ஆசையால் தாழ்தல். கடையர்
என்றதனான், அதன் மறுதலைப் பெயர் வருவிக்கப்பட்டது. பொய்யாய
மானம் நோக்க மெய்யாய கல்வி இழந்தார் பின் ஒரு ஞான்றும் அறிவுடைய ராகாமையின், ''கடையரே'' என்றார். இதனால் கற்றாரது உயர்வும் கல்லாதாரது இழிவும் கூறப்பட்டன. தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு. மணலின்கண் கேணி தோண்டிய அளவிற்றாக ஊறும், அதுபோல மக்கட்கு அறிவு கற்ற அளவிற்றாக ஊறும். ஈண்டுக் ''கேணி'' என்றது, அதற்கண் நீரை. ''அளவிற்றாக'' என்றது, அதன் அளவும் செல்ல
என்றவாறு. சிறிது கற்ற துணையான்
அமையாது, மேன்மேல் கற்றல்
வேண்டும் என்பதாம். இஃது ஊழ் மாறு
கொள்ளாவழியாகலின், மேல் ''உண்மை அறிவே மிகும்'' குறள்.
373 என்றதனோடு மலையாமை அறிக. யாதானும்
நாடாமால் ஊராமால் என்ஒருவன் சாந்துணையுங்
கல்லாத வாறு. கற்றவனுக்குத் தன்னாடும்
தன்னூருமேயன்றி, யாதானும் ஒரு நாடும் நாடாம், யாதானும் ஓர் ஊரும் ஊர்
ஆம்; இங்ஙனமாயின், ஒருவன் தான் இறக்கும் அளவும் கல்லாது கழிகின்றது என்
கருதி? உயிரோடு சேறலின், ''சாம்துணையும்'' என்றார். பிறர்
நாடுகளும் ஊர்களும் தம்போல உற்றுப் பொருட்கொடையும் பூசையும் உவந்து செய்தற்கு ஏதுவாகலின் கல்வி போலச் சிறந்தது பிறிதில்லை, அதனையே எப்பொழுதும் செய்க என்பதாம். ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற் கெழுமையும் ஏமாப்பு உடைத்து. ஒரு |