வற்றிற்கு இவ்விரண்டும்
இன்மையின், அவற்றை ''மாடு அல்ல'' என்றார்.
இவை ஐந்து பாட்டானும் கல்வியது சிறப்புக்
கூறப்பட்டது. அஃதாவது, கற்றலைச்
செய்யாமை; என்றது, அதினின் ஆய இழிபினை.
கல்விச் சிறப்பு மேல் விதிமுகத்தால்
கூறிய துணையான் முற்றுப்பெறாமை நோக்கி,
எதிர்மறை முகந்தானு கூறுகின்றாதாகலின், இது கல்வியின், பின் வைக்கப்பட்டது. அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூல்இன்றிக் கோட்டி கொளல். அரங்கினை இழையாது வட்டாடினாற்போலும், தான் நிரம்புதற்கு ஏதுவாகிய நூல்களைக் கல்லாது ஒருவன் அவையின்கண் ஒன்றனைச் சொல்லுதல். அரங்கு - வகுத்ததானம். வட்டாடல்: உண்டை உருட்டல். இவை ''கட்டளையன்ன வட்டரங்கு இழைத்துக் கல்லாச் சிறாஅர் நெல்லிவட்டாடும்'' நற்.3 என்பதனான் அறிக. நிரம்புதல்: அறிய வேண்டுவன எல்லாம் அறிதல். ''கோட்டி'' என்பது ஈண்டு
ஆகுபெயர். ''புல்லா எழுத்தின் பொருளில் வறுங்கோட்டி'' நாலடி.155 என்புழிப்போல. சொல்லும் பொருளும் நெறிப்படா என்பதாம். கல்லாதான் சொல்கா முறுதல் முலையிரண்டும் இல்லாதாள் பெண்காமுற் றற்று. கல்வியில்லாதான் ஒருவன் அவையின்கண் ஒன்று சொல்லுதலை அவாவுதல், இயல்பாகவே முலை இரண்டும் இல்லாதாள் ஒருத்தி பெண்மையை அவாவினாற் போலும். ''இனைத்தென
அறிந்த சினை'' தொல்.சொல்.33 ஆகலின், தொகையோடு முற்று உம்மை கொடுத்தார். சிறிதும் இல்லாதாள் என்பதாம். அவாவியவழிக் கடைப் போகாது, போகினும் நகை விளைக்கும் என்பதாயிற்று. கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன் சொல்லா திருக்கப் பெறின். கல்லாதவரும் மிக நல்லராவர், தாமே தம்மையறிந்து கற்றார் அவையின்கண் ஒன்றனையும் சொல்லாதிருத்தல் கூடுமாயின். உம்மை - இழிவுசிறப்பு உம்மை, தம்மைத்தாம் அறியாமையின் அது
கூடாது என்பார், ''பெறின்''் என்றும் |