திருக்குறள்
ஓலை எண் :   153

Zoom In NormalZoom Out

விலங்கின்மக்கட்கு     ஏற்றமாய   உணர்வு   மிகுதி  காணப்படுவது
கற்றார்கண்ணேயாகலின்,     கல்லாதாரும்      அவரும்     ஒத்த
பிறப்பினர்அல்லர்  என்பதாம்.  மயக்க  நிரல்  நிரை. இதனால்அவர்
மக்கட்பிறப்பால்   பயன்   எய்தாமை    கூறப்பட்டது.  அஃதாவது,
கேட்கப்படும்   நூற்பொருள்களைக்  கற்றறிந்தார்   கூறக்  கேட்டல்,
கற்றவழி  அதனின்  ஆய  அறிவை   வலியுறுத்தலானும்,   கல்லாத
வழியும்  அதனை  உண்டாக்குதலானும் இது கல்வி,  கல்லாமைகளின்
பின்   வைக்கப்பட்டது.   செல்வத்துள்   செல்வம்   செவிச்செல்வம்
அச்செல்வம்  செல்வத்துள் எல்லாம் தலை. ஒருவருக்குச் சிறப்புடைய
செல்வமானது   செவியான்   வரும்   செல்வம்,   அச்செல்வம்  பிற
செல்வங்கள்   எல்லாவற்றினும்   தலையாகலான்.  செவியான்  வரும்
செல்வம்   -  கேள்வியால்  எல்லாப்  பொருளையும்  அறிதல்.  பிற
செல்வங்கள்  -  பொருளால்  வருவன. அவை நிலையா ஆகலானும்,
துன்பவிளைவின  ஆகலானும், இது தலையாயிற்று. அவற்றை ஒழித்து
இதனையே  செய்க  என்பது  குறிப்பெச்சம்.  செவிக்குணவு இல்லாத
போழ்து  சிறிது  வயிற்றுக்கும்  ஈயப்  படும்.  செவிக்கு  உணவாகிய
கேள்வி  இல்லாத  பொழுது,  வயிற்றுக்கும் சிறிது உணவு இடப்படும்.
சுவை   மிகுதியும்  பிற்பயத்தலும்  உடைய  கேள்வி  உள்ளபொழுது
வெறுக்கப்படுதலான்       ''இல்லாத       போழ்து''       என்றும்,
பெரிதாயவழித்தேடல் துன்பமேயன்றி நோயும் காமமும்  பெருகுதலான்
சிறிது  என்றும்  அதுதானும்  பின்இருந்து  கேட்டற்பொருட்டாகலான்
''ஈயப்படும்''்  என்றும்  கூறினார்.  ஈதல்,  வயிற்றது  இழிவு தோன்ற
நின்றது.