திருக்குறள்
ஓலை எண் :   159

Zoom In NormalZoom Out

னைத்தவாறே  ஒழுகின்,   பாவமும்   பழியும்   ஆம்    ஆகலான்.
அவ்வாறு  ஒழுகுதல்  அறிவு  அன்று  என விலக்கியவாறு ஆயிற்று.
இவை   ஐந்து   பாட்டானும்   அதனது   இலக்கணம்  கூறப்பட்டது.
அறிவுடையார்  ஆவ  தறிவார்  அறிவிலார்  அஃதறி  கல்லா  தவர்.
அறிவுடையராவர்   வரக்   கடவதனை   முன்   அறிய    வல்லார்,
அறிவிலராவார்   அதனைமுன்   அறியமாட்டாதார்.  முன்  அறிதல்:
முன்னே  எண்ணி  அறிதல்.  அஃது  அறிகல்லாமையாவது:  வந்தால்
அறிதல்.    இனி,    ''ஆவது    அறிவார்    என்பதற்குத்   தமக்கு
நன்மையறிவார்''  என்று  உரைப்பாரும்  உளர்.  அஞ்சுவ  தஞ்சாமை
பேதைமை  அஞ்சுவ  தஞ்சல் அறிவார் தொழில்.  அஞ்சப்படுவதனை
அஞ்சாமை   பேதைமையாம்,   அவ்வஞ்சப்படுவதனை    அஞ்சுதல்
அறிவார்    தொழிலாம்.    பாவமும்   பழியும்   கேடும்   முதலாக
அஞ்சப்படுவன  பலவாயினும்,  சாதி  பற்றி,  ''அஞ்சுவது''   என்றார்.
அஞ்சாமை எண்ணாது செய்து நிற்றல். அஞ்சுதல்: எண்ணித் தவிர்தல்.
அது  காரியமன்று  என்று இகழப்படாது என்பார் ''அறிவார் தொழில்''்
என்றார்.   அஞ்சாமை   இறை  மாட்சியாகச்  சொல்லப்பட்டமையின்
,ஈண்டு   அஞ்ச   வேண்டும்   இடம்  கூறியவாறு.  இவை  இரண்டு
பாட்டானும்  அதனைஉடையாரது  இலக்கணம் கூறப்பட்டது. எதிரதாக்
காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய். வரக்கடவ