திருக்குறள்
ஓலை எண் :   161

Zoom In NormalZoom Out

வுடையார்க்கு     அல்லது    கூடாமையின்,      அதன்      பின்
வைக்கப்பட்டது.  செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்  பெருக்கம்
பெருமித  நீர்த்து.  மதமும்  வெகுளியும்  காமமும் ஆகிய குற்றங்கள்
இல்லாத  அரசரது  செல்வம்,  மேம்பாட்டு  நீர்மையினை  உடைத்து.
மதம்:   செல்வக்களிப்பு.  சிறியோர் செயலாகலின், அளவறிந்த காமம்
''சிறுமை''    எனப்பட்டது.   இவை   நீதியல்லன    செய்வித்தலான்,
இவற்றைக்    கடிந்தார்   செல்வம்   நல்வழிப்பாடும்,   நிலைபேறும்
உடைமையின்,   மதிப்புடைத்து    என்பதாம்.   மிகுதிபற்றி   இவை
முற்கூறப்பட்டன. இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா  உவகையும்
ஏதம் இறைக்கு. வேண்டும்வழிப் பொருள் கொடாமையும்;  நன்மையின
நீங்கிய  மானமும்,  அளவிறந்த  உவகையும்,  அரசனுக்குக்   குற்றம்.
மாட்சியான  மானத்தின் நீக்குதற்கு ''மாண்பு இறந்த மானம்''  என்றார்.
அஃதாவது,  ''அந்தணர்  சான்றோர் அருந்தவத்தோர் தம் முன்னோர்
தந்தை   தாய்   என்றிவ''   ரைபுறப்.   வெ.   மா.   பாடாண் -33
வணங்காமையும்  முடிக்கப்படாதாயினும் கருதியது முடித்தே விடுதலும்
முதலாயின.  அளவிறந்த உவகையாவது, கழிகண்ணோட்டம்,  பிறரும்,
''சினனே   காமம்   கழிகண்ணோட்டம்''   என்றிவற்றை  ''அறந்தெரி
திகிரிக்கு  வழியடையாகும்  தீது''  பதிற்.22  என்றார். இவை இரண்டு
பாட்டானும்    குற்றங்களாவன    இவை    என்பது   கூறப்பட்டது.
தினைத்துணையாம்  குற்றம்  வரினும்  பனைத்துணையாக்  கொள்வர்
பழிநாணு  வார்.  பழியை  அஞ்சுவார், தம்கண் தினையின் அளவாம்
குற்றம் வந்ததாயினும், அதனை அவ்வள