சாக்காடு உகைத்தற்கு
உரியனாய அரசன், தீநெறி விலக்கி நன்னெறிச் செலுத்தும் பேரறிவுடையாரைத் தனக்குத் துணையாக் கோடல். அதிகார முறைமையும் இதனானே விளங்கும். பேரறிவுடையராவார்: அரசர்க்கும் அங்கங்கட்கும் மானுடத் தெய்வக் குற்றங்கள் வாராமல் காத்தற்கு உரிய அமைச்சர், புரோகிதர். அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறன்அறிந்து
தேர்ந்து கொளல். அறத்தினது நுண்மையை அறிந்து தன்னின் மூத்த அறிவுடையாரது கேண்மையை, அரசன் அதனது அருமையை ஓர்ந்து, கொள்ளும் திறன் அறிந்து கொள்க. அறநுண்மை நூலானேயன்றி, உய்த்துணர்வானும் அறிய வேண்டுதலின், ''அறம் அறிந்து''
என்றார். மூத்தல் - அறிவானும் சீலத்தானும் காலத்தானும் முதிர்தல். அறிவுஉடையார் நீதியையும் உலகஇயலையும் அறிதலை உடையார். திறன் அறிதலாவது நன்கு மதித்தல், உயரச் செய்தல், அவர் வரை நிற்றல் என்பன முதலாக அவர் பிணிப்புண்ணும் திறன் அறிந்து செய்தல். உற்றநோய் தீக்கி உறாஅமை முன்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல். தெய்வத்தானாக
மக்களானாகத் தனக்கு வந்த துன்பங்களை
நீக்குமாறு அறிந்து நீக்கி;
பின்
அப்பெற்றியன வாராவண்ணம் முன் அறிந்து காக்கவல்ல தன்மையினையுடையாரை; அரசன் அவர் உவப்பன செய்து துணையாகக் கொள்க. தெய்வத்தான் வரும் துன்பங்களாவன: மழையினது இன்மை மிகுதிகளானும்,
காற்று தீ, பிணி என்ற இவற்றானும் வருவன. அவை கடவுளரையும் தக்கோரையும் நோக்கிச் செய்யும் சாந்திகளான் நீக்கப்படும். மக்களான் வரும் துன்பங்களாவன: பகை |