திருக்குறள்
ஓலை எண் :   167

Zoom In NormalZoom Out

கலான்   மன்னவன்   சூழ்வாரைச்   சூழ்ந்து  கொளல். தன்  பாரம்
அமைச்சரைக்    கண்ணாகக்    கொண்டு    நடந்தலான்,   அரசன்
அத்தன்மையராய  அமைச்சரை  ஆராய்ந்து  தனக்குத்  துணையாகக்
கொள்க.     இரண்டாவது     விகாரத்தால்     தொக்கது.   தானே
சூழவல்லனாயினும்  அளவிறந்த  தொழில்களான்  ஆகுலம்   எய்தும்
அரசன்  பாரம்  அதுவே  தொழிலாய அமைச்சரான் அல்லது இனிது
நடவாமை   பற்றி,  அவரைக்   கண்ணாகக்  கூறினார்.   ஆராய்தல்
அமைச்சியலுள்    சொல்லப்படும்    இலக்கணத்தினர்   என்பதனை
ஆராய்தல்.     இவை     மூன்று     பாட்டானும்    பெரியாரைத்
துணைகோடலின்சிறப்புக்    கூறப்பட்டது.   தக்கார்   இனத்தனாய்த்
தான்ஒழுக  வல்லானைச்  செற்றார்  செயக்கிடந்த  தில். தக்காராகிய
இனத்தை  உடையவனாய்த்  தானும் அறிந்து ஒழுக வல்ல  அரசனை,
பகைவர்  செய்யக்  கிடந்ததொரு  துன்பமும் இல்லை. தக்கார்: அறிவு
ஒழுக்கங்களால்   தகுதியுடையார்.   ஒழுகுதல்:  அறநீதிகளின்  நெறி
வழுவாமல்  நடத்தல் வஞ்சித்தல், கூடினவரைப் பிரித்தல், வேறு பகை
விளைத்தல்   என்ற   இவற்றானும்,  வலியானும்  பகைவர்  செய்யுந்
துன்பங்கள்   பலதிறத்த   ஆயினும்,   தானும்  அறிந்து,   அறிவார்
சொல்லும்   கொண்டொழுகுவான்கண்  அவற்றுள்  ஒன்றும்  வாராது
என்பார்,   ''செற்றார்   செயக்கிடந்தது   இல்''   என்றார்.  இடிக்குந்
துணையாரை  ஆள்வாரை  யாரே  கெடுக்கும் தகைமை யவர்? தீயன
கண்டால்  நெருங்கிச்  சொல்லும் துணையாந் தன்மையை உடையாரை
இவர்   நமக்குச்   சிறந்தார்  என்று  ஆளும்  அரசரை,  கெடுக்கும்
பெருமை உடைய பகைவர் உலகத்