ஒருங்கு வினையாக் குறித்துச்
செய்தாலும் ஒருவாற்றான் உய்தல் கூடும். நல்லார் தொடர்பை விட்டால் ஒருவாற்றானும் உய்தல் கூடாமையின், இது செய்தல் அதனினும் தீது என்பதாம். இவை மூன்றுபாட்டானும் அது
செய்யாத வழிப்படும் குற்றம் கூறப்பட்டது. அஃதாவது, சிறிய
இனத்தைப் பொருந்தாமை,
சிறிய இனமாவது ''நல்லதன் நலனும்
தீயதன் தீமையும் இல்'' என்போரும் புறநா.
29 விடரும், தூர்த்தரும், நடரும் உள்ளிட்ட
குழு. அறிவைத் திரித்து இருமையும்
கெடுக்கும் இயல்பிற்றாய அதனைப்
பொருந்தின், பெரியாரைத் துணைக்கோடல்
பயன் இன்று என்பது உணர்த்தற்கு இஃது
அதன் பின் வைக்கப்பட்டது., சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும். பெரியோர் இயல்பு சிறிய இனத்தைச் அஞ்சாநிற்கும், ஏனைச் சிறியோர் இயல்பு அது
சேர்ந்த பொழுதே அதனைத் தனக்குச் சுற்றமாக
எண்ணித் துணியும். ''தத்தம் அறிவு திரியுமாறும், அதனால்
தமக்கு வரும்
துன்பமும் நோக்கலின், அறிவுடையார் அஞ்சுவர்
என்றும், அறிவு ஒற்றுமையான்
பிறிது நோக்காமையின், அறிவிலாதார் தமக்குச்
சுற்றமாகத் துணிவர் என்றும் கூறினார். பொருளின் தொழில்கள் பண்பின்மேல் நின்றன. இதனான் ''சிறிய இனம் பெரியோர்க்கு'' ஆகாது'' என்பது கூறப்பட்டது. நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க் கினத்தியல்ப தாகும் அறிவு. தான் சேர்ந்த நிலத்தினது இயல்பானே நீர் தன் தன்மை திரிந்து அந்நிலத்தின் தன்மைத்தாம், அதுபோல மாந்தர்க்குத் தாம் சேர்ந்த இனத்தின் இயல்பானே அறிவும் தன் தன்மை திரிந்து அவ்வினத்தின் தன்மைத்தாம்.
எடுத்துக்காட்டுவமை: விசும்பின்கண் தன் தன்மைத்தாய நீர் நிலத்தோடு சேர்ந்த வழி, நிறம், சுவை
முதலிய பண்புகள் திரிந்தாற்போல, |