திருக்குறள்
ஓலை எண் :   171

Zoom In NormalZoom Out

கோடாக  உளவாம்.  மனம்  தூயனாதல்  ஆவது,  விசேட  உணர்வு
புலப்படுமாறு  இயற்கையாய  அறியாமையின்  நீங்குதல்.  செய்வினை
தூயனாதல்    ஆவது,    மொழிமெய்களால்   செய்யும்   நல்வினை
உடையனாதல்.  தூவென்பது  அப்பொருட்டாதல் ''தூவறத் துறந்தாரை
கலித்.  நெய்த,1   என்பதனானும் அறிக. ஒருவன் இனம் தூயனாகவே
அதனோடு  பயிற்சி  வயத்தான்  மனம் தூயனாய் அதன்கண் விசேட
உணர்வு  புலப்பட்டு,  அதனால்  சொல்லும் செயலும் தூயனாம் என,
இதனான்இனத்து   உள்ளவாம்   ஆறு  கூறப்பட்டது. மனம்தூயார்க்
கெச்சம்நன்  றாகும்  இனம்தூயார்க்  கில்லைநன் றாகா வினை. மனம்
தூயராயினார்க்கு   மக்கட்பேறு   நன்று   ஆகும்,இனம்  தூயார்க்கு
நன்றாகாத     வினையாதும்    இல்லை.    காரியம்   காரணத்தின்
வேறுபடாமையின்  ''எச்சம்  நன்று ஆகும்''.் என்றும், நல்லினத்தோடு
எண்ணிச்  செய்யப்படுதலின்  ''எல்லா வினையும் நல்லவாம்''் என்றும்
கூறினார்.  மனநலம்  மன்னுயிர்க் காக்கம் இனநலம் எல்லாப்  புகழும்
தரும்.   நிலைபெற்ற  உயிர்கட்கு  மனத்தது  நன்மை  செல்வத்தைக்
கொடுக்கும்,   இனத்தது  நன்மை  அதனோடு  எல்லாப்  புகழையும்
கொடுக்கும்.  ''மன்,  உயிர்''் என்றது ஈண்டு உயர்திணைமேல் நின்றது.
''தரும்''்  என்னும்  இடவழுவமைதிச்  சொல்  முன்னும்  கூறப்பட்டது.
உம்மை  இறந்தது தழீஇய எச்சஉம்மை. மனம் நன்றாதல்தானே அறம்
ஆகலின்,  அதனை  ''ஆக்கம்   தரும்'' என்றும், புகழ்  கொடுத்தற்கு
உரிய   நல்லோர்தாமே  இனமாகலின்,  ''இனநலம்  எல்லாப் புகழும்
தரும்''  என்றும் கூறினார். மேல் மனநன்மை இனநன்மை பற்றி  வரும்
என்பதனை   உட்கொண்டு,  அஃது   இயல்பாகவே   உடையார்க்கு
அவ்வின நன்மை வேண்டா என்பாரை நோக்கி, ''அது