வேயன்றி அத்தன்மைய
பலவற்றையும் தரும்''் என, அவர்க்கும் இது வேண்டும் என்பது, இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது. மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க் கினநலம் ஏமாப் புடைத்து. மனநலம் நன்கு உடையராயினும் மனநன்மையை
முன்னை நல்வினையால் தாமே உடையராயினும் சான்றோர்க்குஇனநலம் ஏமாப்பு உடைத்து அமைந்தார்க்கு இனநன்மை
அதற்குவலியாதலையுடைத்து ''நான்கால்''் என்னும் மூன்றன் உருபுவிகாரத்தால் தொக்கது. அந் நல்வினை உள்வழியும்மனநலத்தை வளர்த்து வருதலின்
அதற்கு ஏமாப்பு உடைத்தாயிற்று. மனநலத்தின் ஆகும்
மறுமைமற் றஃதும் இனநலத்தின் ஏமாப் புடைத்து. ஒருவற்கு மனநன்மையானே
மறுமை இன்பம் உண்டாம்; அதற்கு அச்சிறப்புத்தானும் இனநன்மையான்
வலி பெறுதலை உடைத்து,மனநலத்தின் ஆகும் மறுமை என்றது,
பயப்பது மனநன்மைதானே, பிறிதொன்று அன்று, என்னும் மதத்தை உடம்பட்டுக் கூறியவாறு. மற்று-வினைமாற்று. உம்மை இறந்தது தழீஇய எச்ச உம்மை. ஒரோவழித் தாமத குணத்தான் மனநலம்
திரியினும் நல்லினம் ஒப்ப நிறுத்தி மறுமை பயப்பிக்கும் என நிலைபெறச் செய்யுமாறு கூறப்பட்டது. இவை ஐந்து பாட்டானும் சிற்றினம் சேராமையது சிறப்பு நல்லினம் சேர்தலாகிய எதிர்மறை முகத்தால் கூறியவாறு அறிக. நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை தீயினத்தின் அல்லற் படுப்பதூஉம் இல். ஒருவற்கு நல்லினத்தின் மிக்க துணையும் இல்லை, தீய இனத்தின் மிக்க பகையும் இல்லை. ஐந்தன் உருபுகள் உறழ்பொருளின்கண்
வந்தன. ''ஊங்கு'' என்பது பின்னும் |