்வார்க்கு'' என்றதனால்,
''வினை'' என்னும் செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. வினையாவது: மேற்சேறல் முதல் வேறல் ஈறாய தொழில். பொருள்கட்கு ஏதுவாய் அதனில் தவறாமையின்,
அரிய பொருள்கள் எல்லாம் எளிதின் எய்துவர் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் செய்யத்தகும் வினையும், அது செய்யுமாறும் கூறப்பட்டன. ஆக்கங் கருதி முதல்இழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார், மேல் எய்தக்கடவ ஊதியத்தினை நோக்கி முன் எய்தி நின்ற முதல் தன்னையும் இழத்தற்கு ஏதுவாய செய்வினையை,
அறிவு உடையார் மேற்கொள்ளார். ''கருதி'' என்னும்
வினையெச்சம் ''இழக்கும்'' என்னும் பெயர்எச்ச வினை கொண்டது. எச்ச
உம்மை விகாரத்தால் தொக்கது. ஆக்கமே அன்றி முதலையும் இழக்கும் வினைகளாவன: வலியும் காலமும் இடனும் அறியாது பிறர் மண் கொள்வான் சென்று, தம் மண்ணும் இழத்தல் போல்வன. முன் செய்து போந்த வினையாயினும்
என்பார், ''செய்வினை'' என்றார். தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும் ஏதப்பா டஞ்சு பவர். இனத்தோடும் தனித்தும் ஆராய்ந்து துணிதல் இல்லாத வினையைத் தொடங்கார், தமக்கு இளிவரவு
என்னும் குற்றம் உண்டாதலை அஞ்சுவார்.
தொடங்கின் இடையின்
மடங்கலாகாமையின், ''தொடங்கார்''
என்றார். இளிவரவு - அவ்வினையால் பின் அழிவு எய்தியவழி, அதன் மேலும் அறிவும் மானமும் இலர் என்று உலகத்தார் இகழும் இகழ்ச்சி. அஃது உண்டாதல் ஒருதலையாகலின், தெளிவுள் வழித் தொடங்குக என்பதாம். வகையறச் சூழா தெழுதல் பகைவரைப் பாத்திப் படுப்பதோர் ஆறு. சென்றால் நிகழும் திறங்களை எல்லாம் முற்ற
எண்ணாது, |