சிலவெண்ணிய துணையானே
அரசன் பகைவர்மேல் செல்லுதல், அவரை வளரும் நிலத்திலே நிலைபெறச் செய்வது ஒரு
நெறி ஆம். அத்திறங்களாவன: வலி, காலம்,
இடன் என்ற இவற்றால் தனக்கும் பகைவர்க்கும்
உளவாம் நிலைமைகளும், வினை தொடங்குமாறும், அதற்கு வரும் இடையூறுகளும், அவற்றை நீக்குமாறும், வெல்லுமாறும், அதனால் பெறும் பயனும் முதலாயின. அவற்றுள் சில
எஞ்சினும் பகைவர்க்கு இடனாம்
ஆகலான், முற்றுப்பெற
எண்ண வேண்டும் என்பதாம். இவை மூன்று
பாட்டானும்ஒழியத்தகும் வினையும், ஒழியா வழிப்படும்
இழுக்கும்கூறப்பட்டன. செய்தக்க அல்ல
செயக்கெடும் செய்தக்க செய்யாமை
யானும் கெடும். அரசன் தன்வினைகளுள் செய்யத்தக்கன
அல்லவற்றைச் செய்தால் கெடும், இனி
அதனானே அன்றிச் செய்யத்தக்கனவற்றைக்
செய்யாமை தன்னானும் கெடும். செய்யத்தக்கன
அல்லாவாவன: பெரிய முயற்சியினவும்,
செய்தால் பயனில்லனவும், அது
சிறிதாயினவும் ஐயமாயினவும்,
பின் துயர்விளைப்பனவும் என இவை. செய்யத்தக்கனவாவன:
அவற்றின் மறுதலையாயின. இச்செய்தல்
செய்யாமைகளான் அறிவு, ஆண்மை, பெருமை, என்னும்
மூவகை ஆற்றலுள் பொருள், படை என இரு வகைத்தாகிய பெருமை சுருங்கிப் பகைவர்க்கு எளியனாம் ஆகலான், இரண்டும் கேட்டிற்கு ஏதுவாயின. இதனான் ''செய்வன செய்து, ஒழிவன ஒழிக'' என இருவகையனவும் உடன் கூறப்பட்டன. எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்ப திழுக்கு. செய்யத்தக்க கருமமும் முடிக்கும்
உபாயத்தை எண்ணித் தொடங்குக, தொடங்கி வைத்துப் பின்
எண்ணக் கடவோம் என்று ஒழிதல் குற்றம் ஆதலான். துணிவுபற்றி
நிகழ்தலின் துணிவு எனப்பட்டது.
சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது.
உபாயம் என்பது அவாய்நிலையான் வந்தது. அது,
கொடுத்தல், இன்சொல் சொல்லல், வேறுபடுத்தல், |