தீர்தல் மாலையது என்பது
பெற்றாம். வினை வாய்த்து வருதலான், அதனின் ஆகும் செல்வம் எஞ்ஞான்றும் நீங்காது
என்பதாம்.'' அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்? அரசரால்
செய்தற்கு அரிய வினைகள் என்று
சொல்லப்படுவன உளவோ, அவற்றை முடித்தற்கு
ஏற்ற கருவிகளுடனே செய்தற்கு ஆம் காலம் அறிந்து
செய்வராயின். கருவிகளாவன்: மூவகை ஆற்றலும் நால்வகை உபாயங்களுமாம். ''அவை உளவாய வழியும் காலம் வேண்டும்'' என்பது அறிவித்தற்குக் ''கருவியான''்
என்றார். எல்லா வினையும் எளிதில் முடியும் என்பதாம். ஞாலம் கருதினும்
கைகூடும் காலம் கருதி இடத்தால் செயின். ஒருவன் ஞாலம் முழுவதும் தானே ஆளக் கருதினானாயினும் அஃது அவன் கையகத்ததாம், அதற்குச் செய்யும் வினையைக் காலம் அறிந்து இடத்தோடு பொருந்தச் செய்வானாயின். ''இடத்தான்'' என்பதற்கு மேல்
''கருவியான்''் என்பதற்கு உரைத்தாங்கு உரைக்க, கைகூடாதனவும் கைகூடும் என்பதாம். இவை மூன்று பாட்டானும் காலம் அறிதற் பயன் கூறப்பட்டது. காலம் கருதி இருப்பர் கலங்காது ஞாலம் கருது பவர். தப்பாது ஞாலம் எல்லாம் கொள்ளக் கருதும் அரசர், தம் வலிமிகுமாயினும், அது கருதாது, அதற்கு ஏற்ற காலத்தையே கருதி அது வருந்துணையும் பகைமேல் செல்லார்.'' தப்பாமை: கருதிய வழியே கொள்ளுதல். வலி மிகுதி ''காலம் கருதி'' என்றதனால் பெற்றாம். அது கருதாது செல்லின் இருவகைப் பெருமையும்
தேய்ந்து வருத்தமும் உறுவராகலின்,
இருப்பர் என்றார். இருத்தலாவது: நட்பாக்கல்,
பகையாக்கல், மேற்சேறல், இருத்தல்,
பிரித்தல், கூட்டல் என்னும் அறுவகைக் குணங்களுள்
மேற்செலவிற்கு மாறாயது. இதனாற் காலம் வாராவழிச்
செய்வது கூறப்பட்டது. ஊக்கம் உடையான் ஒடுக் |