திருக்குறள்
ஓலை எண் :   183

Zoom In NormalZoom Out

கம்  பொருதகர்  தாக்கற்குப்  பேரும்  தகைத்து. வலிமிகுதி  உடைய
அரசன்   பகை   மேற்செல்லாது  காலம்  பார்த்திருக்கின்ற  இருப்பு,
பொருகின்ற  தகர் தன் பகைகெடப் பாய்தற்பொருட்டுப் பின்னே கால்
வாங்கும்   தன்மைத்து.   உவமைக்கண்   ''தாக்கற்கு''   என்றதனால்
பொருளினும்  வென்றி  எய்தற்பொருட்டு  என்பது கொள்க. இதனான்
அவ்விருப்பின்    சிறப்புக்   கூறப்பட்டது.   பொள்ளென   ஆங்கே
புறம்வேரார்  காலம்பார்த்  துள்வேர்ப்பர்  ஒள்ளி  யவர். அறிவுடைய
அரசர்,  பகைவர்  மிகை  செய்த  பொழுதே  விரைவாக  அவரறியப்
புறத்து  வெகுளார்,  தாம்  அவரை  வெல்லுதற்கு  ஏற்ற காலத்தினை
அறிந்து  அது  வரும் துணையும் உள்ளே வெகுள்வர். ''பொள்ளென''
என்பது  குறிப்பு  மொழி.  ''வேரார்''் ''வேர்ப்பர்'' எனக் காரணத்தைக்
காரியமாக     உபசரித்தார்,    அறிய    வெகுண்டுழித்   தம்மைக்
காப்பாராகலின், ''புறம் வேரார்'' என்றும் வெகுளி ஒழிந்துழிப் பின்னும்
மிகை   செய்யாமல்   அடக்குதல்  கூடாமையின்  ''உள்  வேர்ப்பர்''
என்றும்  கூறினார்.  செறுநரைக்  காணின்  சுமக்க இறுவரை காணின்
கிழக்காம்  தலை.  தாம் வெல்லக்கருதிய அரசர் பகைவருக்கு இறுதிக்
காலம்     வருந்துணையும்     அவரைக்     கண்டால்     பணிக,
பணியவே,அக்காலம்   வந்திறும்  வழி  அவர்  தகைவின்றி  இறுவர்.
''பகைமை  ஒழியும் வகை மிகவும் தாழ்க'' என்பார், ''சுமக்க''  என்றும்,
அங்ஙனம்   தாழவே,  அவர்  தம்மைக்காத்தல்  இகழ்வர்  ஆகலின்
தப்பாமல் கெடுவர் என்பார், ''அவர் தலை கீழாம்'' என்றும்  கூறினார்.
தலைமேற்கொண்டதொரு   பொருளைத்   தள்ளுங்கால்,  அது  தன்
தலைகீழாக  விழுமாகலின், அவ்வியல்பு பெறப்பட்டது. இவை இரண்டு
பாட்டானும்  இருக்கும்வழிப்  பகைமை தோன்றாமல் இருக்க  என்பது
கூறப்பட்டது.  எய்தற் கரிய தியைந்தக்கால்அந்நிலையே செய்தற் கரிய
செயல். பகையை  வெல்லக்கருதும் அரசர், தம்மால் எய்துதற்கு அரிய
காலம்  வந்து கூடியக்கால், அது கழிவதற்கு முன்பே அது கூடாவழித்
தம்மாற்செய்தற்கு    அரிய    வினைகளைச்    செய்க.    ஆற்றல்
முதலியவற்றால்