திருக்குறள்
ஓலை எண் :   185

Zoom In NormalZoom Out

நூழைகளானும்   அவர்   புகலொடு    போக்கு   ஒழியும்   வகை
அரணினைச்   சூழ்ந்து.   ஒன்றற்கு  ஒன்று  துணையாய்த்  தம்முள்
நலிவில்லாத பலபடை இருப்பிற்கும், மதிலும் அகழும் முதலிய அரண்
செய்யப்பட்ட   அரசிருப்பிற்கும்   ஏற்ற,   நிலக்கிடக்கையும்  நீரும்
உடையது. அது பெற்றால் இரண்டும் செய்க என்பதாம். முரண்சேர்ந்த
மொய்ம்பி   னவர்க்கும்  அரண்சேர்ந்தாம்  ஆக்கம்  பலவுந்  தரும்
மாறுபாட்டோடு கூடிய வலியினை உடையார்க்கும், அரணைச் சேர்ந்து
ஆகின்ற  ஆக்கம்  பல  பயன்களையும்  கொடுக்கும். மாறுபாடாவது:
ஞாலம்  பொது  எனப்  பொறா அரசர் மனத்தின் நிகழ்வதாகலானும்,
வலியுடைமை  கூறிய  அதனானும், இது  பகைமேற்  சென்ற  அரசர்
மேற்றாயிற்று.  உம்மை  -  சிறப்பு  உம்மை.  அரண்  சேராது ஆம்
ஆக்கமும்    உண்மையின்,ஈண்டு    ஆக்கம்    விசேடிக்கப்பட்டது.
''ஆக்கம்''  என்றது  அதற்கு  ஏதுவாய  முற்றினை. அது கொடுக்கும்
பயன்களாவன: பகைவரால் தமக்கு நலிவின்மையும், தாம் நிலைபெற்று
நின்று  அவரை  நலிதலும்  முதலாயின. ஆற்றாரும்  ஆற்றி  அடுப
இடனறிந்து  போற்றார்கண்  போற்றிச் செயின் வலியர் அல்லாதாரும்
வலியாராய்  வெல்வர், அதற்கு  ஏற்ற இடத்தினை அறிந்து, தம்மைக்
காத்துப்  பகைவர்மாட்டு வினை செய்வாராயின். ''வினை'' என்பதூஉம்
''தம்மை''   என்பதூஉம்   அவாய்   நிலையான்  வந்தன.   காத்தல்,
பகைவரான்   நலிவு   வராமல்  அரணானும்  படையானும்  காத்தல்.
இவற்றான்   வினை   செய்வாராயின்  மேற்சொல்லிய  வலியின்றியும்
வெல்வர்  என்பதாம்.  எண்ணியார் எண்ணம் இழப்பர் இடன்அறிந்து
துன்னியார்   துன்னிச்   செயின்   தாம்   வினை  செய்தற்கு  ஏற்ற
இடத்தினை  அறிந்து  சென்ற  அரசர்,  அரணைப் பொருந்தி நின்று
அதனைச் செய்வாராயின், அவரை