திருக்குறள்
ஓலை எண் :   192

Zoom In NormalZoom Out

ஒரு  தவறு   காணாது   வைத்து   ஐயுறுமாயின்,  அதனை  அவன்
அறிந்து,  ''இனி  இது  நில்லாது'' என்னும் கருத்தான் அவ்வினையை
நெகிழ்த்துவிடும்,  அதுவேயன்றிப்  பகைவரால்  எளிதில்  பிரிக்கவும்
படும். ஆதலால் தெளிந்தான்கண் ஐயுறவும் ஆகாதாயிற்று. தெளிவிற்கு
எல்லை  கூறியவாறு. இவை ஐந்து பாட்டானும், தெளியப்படாதார்இவர்
என்பதூஉம்,  அவரைத்  தெளிந்தால்  படும்  இழுக்கும், தெளிவிற்கு
எல்லையும்  கூறப்பட்டன. அஃதாவது,  அத் தெளிப்பட்டாரை அவர்
செய்யவல்ல வினைகளை அறிந்து,  அவற்றின்கண்ணே  ஆளும்திறம்,
அதிகார  முறைமையும்  இதனானே  விளங்கும். நன்மையும் தீமையும்
நாடி  நலம்புரிந்த  தன்மையான்  ஆளப்  படும்.  அரசன் முதற்கண்
ஒருவினையைத்   தன்கண்   வைத்தால்,   அதன்கண்   ஆவனவும்
ஆகாதனவும்  ஆய  செயல்களை  ஆராய்ந்து  அறிந்து,  அவற்றுள்
ஆவனவற்றையே  விரும்பிய  இயல்பினையுடையான், பின் அவனால்
சிறந்த   வினைகளிலே   ஆளப்படும்.   தன்னை  உரிமை  அறிதற்
பொருட்டு   அகம்   புறங்கட்கு  நடுவாயதோர்  வினையை  அரசன்
தன்கண்  வைத்தவழி,  அதன்கண்  ஆம் செயல்களையே செய்தவன்
பின்னும்   அவ்வியல்பினனாதல்  பற்றி,  அகமாய  வினைக்கண்ணே
ஆளப்படுவன்  என்பதாயிற்று.  ''புரிந்த''  என்ற  இறந்த  காலத்தான்,
முன்  உரிமை அறிதற்பொருட்டு வைத்த வினையாதல் பெற்றாம். வாரி
பெருக்கி   வளம்படுத்து   உற்றவை   ஆராய்வான்  செய்க  வினை.
பொருள்வரு    வாயில்களை    விரியச்   செய்து,   அப்பொருளால்
செல்வங்களை    வளர்த்து,    அவ்   வாயில்கட்கும்   பொருட்கும்
செல்வங்கட்கும்   உற்ற   இடையூறுகளை  நாள்தோறும்  ஆராய்ந்து
நீக்கவல்லவன்,  அரசனுக்கு  வினை  செய்க.  வாயில்களாவன: மேல்
இறை  மாட்சியுள்  ''இயற்றலும்'' குறள், 385 என்புழி   உரைத்தனவும்,
உழவு,பசுக்காவல்,     வாணிகம்     என்னும்      வார்த்தையுமாம்.
செல்வங்களாவன. ஆண்டுப் பொருளும் இன்ப