திருக்குறள்
ஓலை எண் :   195

Zoom In NormalZoom Out

ஆடற்குரியானைஆளும்  திறம்  கூறப்பட்டது.  நாள்தோறும்   நாடுக
மன்னன்   வினைசெய்வான்   கோடாமை   கோடா  துலகு.  வினை
செய்வான்  கோடாது  ஒழிய  உலகம்  கோடாது,  ஆதலால் அரசன்
அவன்   செயலை   நாள்தோறும்  ஆராய்க.  அஃது  ஒன்றனையும்
ஆராயவே  அதன்  வழித்தாய  உலகம்  எல்லாம்  ஆராய்ந்தானாம்,
அதனால்   அவன்   உரிமை  அழியாமல்  தன்னுள்ளே  ஆராய்ந்து
போதுக  என்பதாம்.  இதனான்  ஆண்டவழிச் செய்வது கூறப்பட்டது.
அஃதாவது,   அரசன்  தன்   கிளைஞரைத்   தன்னின்   நீங்காமல்
அணைத்தல்.  வினை  செய்வாரைக்  கூறி ஏனைச்சுற்றம் கூறுகின்றார்
ஆகலின்,  இது  தெரிந்து   வினையாடலின்  பின்  வைக்கப்பட்டது.
பற்றற்ற  கண்ணும்  பழமைபா  ராட்டுதல்  சுற்றத்தார் கண்ணே உள.
ஒருவன்  செல்வம் தொலைந்து வறியனாய வழியும் விடாது தம்மோடு
அவனிடைப்   பழைமையை   எடுத்துக்   கொண்டாடும்  இயல்புகள்,
சுற்றத்தார்மாட்டே  உள  ஆவன.  சிறப்பு  உம்மை  வறியனாயவழிப்
பாராட்டப்படாமை  விளக்கி  நின்றது. பழைமை:  பற்றறாக் காலத்துத்
தமக்குச்  செய்த  உபகாரம்.  பிறரெல்லாம் அவன் பற்றற்ற பொழுதே
தாமும்  அவனோடு பற்றறுவர் ஆகலின்,ஏகாரம் தேற்றத்தின்கண்ணே
வந்தது.   இதனான்  சுற்றத்தது  சிறப்புக்  கூறப்பட்டது.  விருப்பறாச்
சுற்றம்  இயையின்  அருப்பறா ஆக்கம் பலவும் தரும். அன்பு அறாத
சுற்றம்  ஒருவற்கு  எய்துமாயின், அஃது அவற்குக் கிளைத்தல் அறாத
செல்வங்கள்   பலவற்றையும்  கொடுக்கும்.  உட்பகையின்  நீக்குதற்கு
''விருப்புஅறாச்  சுற்றம''்  என்றும், தானே வளர்க்கும் ஒரு தலையாய
செல்வத்தின்    நீக்குதற்கு   அருப்பு   அறா   ஆக்கம்   என்றும்,
விசேடித்தார்.  தொடை நோக்கி விகார மாயிற்று. ''இயையின''் என்பது,
அதனது  அருமை  விளக்கி  நின்றது.  ஆக்கம் என்பது ஆகுபெயர்.
பலவும்   என்பது   அங்க்கள்  ஆறினையும்  நோக்கிப்  பலர்  கூடி
வளர்த்தலின்,   அவை   மேல்மேல்  கிளைக்கும்  என்பது  கருத்து.
அளவளா  வில்லாதான்  வாழ்க்கை குளவளாக் கோடுஇன்றி நீர்நிறைந்
தற்று.  அச்சுற்றத்தோடு  நெஞ்சு  கலத்தல்  இல்லாதாவன் வாழ்க்கை,
குளப்பரப்புக்   கரையின்றி   நீர்   நிறைந்தாற்போலும்.  சுற்றத்தோடு
என்பது   அதிகாரத்தான்  வந்தது.  நெஞ்சுக்  கலப்புத்  தன்னளவும்
அதனளவும்  உசாவுதலான் வருவது ஆகலின், ''அளவளாவு''  என்பது
ஆகுபெயர். ''வாழ்க்கை'' என்றதூஉம் அதற்கு ஏதுவாய செல்வங்களை.