திருக்குறள்
ஓலை எண் :   196

Zoom In NormalZoom Out

''நிறைதல்''  என்னும்    இடத்து    நிகழ்    பொருளின்   தொழில்
இடத்தின்மேல்  நின்றது.  சுற்றம் இல்லாதான்செல்வங்கள் தாங்குவார்
இன்மையின்   புறத்துப்   போம்   என்பதாம்.   சுற்றத்தால்  சுற்றப்
படஒழுகல்  செல்வம்தான் பெற்றத்தால் பெற்ற பயன். செல்வம் பெற்ற
அதனால்   ஒருவன்   பெற்ற  பயனாவது,  தன்  சுற்றத்தால்  தான்
சூழப்படும்  வகை  அதனைத்  தழீஇ  ஒழுகுதல். பெற்ற என்பதனுள்
அகரமும்   அதனான்  என்பதனுள்  அன்சாரியையும்தொடைநோக்கி
விகாரத்தால்  தொக்கன.  இவ்  வொழுக்குப்பகையின்றி அரசாள்தற்கு
ஏதுவாகலின்,  இதனைச் செல்வத்திற்குப்பயன் என்றார். இவை மூன்று
பாட்டானும்  சுற்றந்  தழால்செல்வத்திற்கு  ஏதுவும் அரணும் பயனும்
ஆம்   என்பதுகூறப்பட்டது.   கொடுத்தலும்  இன்சொலும்  ஆற்றின்
அடுக்கிய சுற்றத்தால் சுற்றப் படும். ஒருவன் சுற்றத்திற்கு வேண்டுவன
கொடுத்தலையும்  இன்சொல்  சொல்லுதலையும் வல்லனாயின், தம்மில்
தொடர்ந்த   பல   வகைச்   சுற்றத்தானே   சூழப்படும்.  இரண்டும்
அளவறிந்து  ஆற்றுதல் அரிது என்பது தோன்ற, ''ஆற்றின்''் என்றார்.
தம்மில்  தொடர்தலாவது  - சுற்றத்தது சுற்றமும் அதனது சுற்றமுமாய்
அவற்றான்   பிணிப்புண்டு   வருதல்.  இவ்வுபாயங்களை  வடநூலார்
தானமும்  சாமமும்  என்ப.  பெரும்கொடையான்  பேணான் வெகுளி
அவனின் மருங்குடையார் மாநிலத்து இல். ஒருவன் மிக்க கொடையை
உடையனுமாய்  வெகுளியை விரும்பானுமாயின், அவன்போலக் கிளை
உடையார்  இவ்வுலகத்து  இல்லை. மிக்க கொடை: ஒன்றானும் வறுமை
எய்தாமல்     கொடுத்தல்.     விரும்பாமை:    ''இஃது    அரசற்கு
வேண்டுவதொன்று''  என்று  அளவிறந்து  செய்யாமை. காக்கை கரவா
கரைந்துண்ணும்   ஆக்கமும்  அன்னநீ  ரார்க்கே  உள.  காக்கைகள்
தமக்கு   இரையாயின  கண்டவழி  மறையாது  இனத்தை  அழைத்து
அதனோடும் கூட உண்ணாநிற்கும், சுற்றத்தான் எய்தும் ஆக