திருக்குறள்
ஓலை எண் :   198

Zoom In NormalZoom Out

காரணத்தைச்  செய்யாதவழிப்  பின்னும்  பிரிந்து போய்ப் பகையோடு
கூடும்  ஆகலின்,  இழைத்திருந்து  என்றும்,  அன்பின்றிப்  போய்ப்
பின்னும்  காரணத்தான்  வந்தமையின்,  எண்ணிக்  கொளல் என்றும்
கூறினார்.  பிரிந்து போய சுற்றத்தாருள் தீமை செய்யப்போய் அதனை
ஒழிய  வருவானும்,  பின்  நன்மைசெய்ய  வருவானும்  தழுவப்படும்
ஆகலின், தழுவுமாறு முறையே இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.
அஃதாவது,  உருவும்  திருவும் ஆற்றலும் முதலாயவற்றான் மகிழ்ந்து
தற்காத்தலின்  பகையழித்தல்  முதலிய  காரியங்களினும் சோர்தலைச்
செய்யாமை.     மேற்சொல்லிய     சுற்றத்தாரால்      பயனுள்ளது
இச்சோர்வுஇல்வழியாகலின்,     இது   சுற்றம்    தழாலின்    பின்
வைக்கப்பட்டது.   இறந்த    வெகுளியின்   தீதே  சிறந்த  உவகை
மகிழ்ச்சியின்  சோர்வு.  மிக்க  உவகைக்  களிப்பான்  வரும்  மறவி,
அரசனுக்கு   அளவிறந்த   வெகுளியினும்   தீது.   மிக்க   உவகை
பெருஞ்செல்வம்,  பேரின்பம்,  பெருமிதம் என்று இவற்றான் வருவது.
அளவு,   பகைவரை   அடர்த்தற்கும்   கொடியோரை  ஒறுத்தற்கும்
வேண்டுவது.  இறந்த  வெகுளி: ஒரோவழிப் பகைவரையும் கொல்லும்,
இஃது  அன்னதன்றித்  தன்னையே கோறலின், அதனினும் தீதாயிற்று
பொச்சாப்புக்  கொல்லும்  புகழை  அறிவினை  நிச்ச  நிரப்புக்கொன்
றாங்கு.  ஒருவன்  புகழினை  அவன்  மறவி  கெடுக்கும், அறிவினை
நிச்சம்  நிரப்புக்  கெடுக்குமாறு  போல.  நிச்ச நிரப்பு:  நாள்தோறும்
இரவான்  வருந்தித் தன் வயிறு நிறைத்தல். அஃது அறிவு உடையான்
கண்    உண்டாயின்    அவற்கு    இளிவரவானும்   பாவத்தானும்
எள்ளற்பாட்டினை  விளைத்து.  அவன் நன்கு மதிப்பினை அழிக்கும்:
அது  போல மறவியும் புகழ் உடையான் கண் உண்டாயின், அவற்குத்
தற்காவாமையானும்,   காரியக்    கேட்டானும்    எள்ளற்பாட்டினை
விளைத்து அவன் நன்கு மதிப்பினை அழிக்கும் என்பதாயிற்று. இவை
இரண்டு    பாட்டானும்   பொச்சாப்பினது   குற்றம்   கூறப்பட்டது.
பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத் தெப்பால்நூ லோர்க்கும்
துணிவு. பொ