ச்சாந்து ஒழுகுவார்க்குப்
புகழுடைமை இல்லை, அவ்வின்மை இந்நீதி நூலுடையார்க்கேயன்றி உலகத்து எவ்வகைப்பட்ட
நூல் உடையார்க்கும் ஒப்ப முடிந்தது. அரசர்க்கேயன்றி அறம் முதலியன நான்கினும் முயல்வார் யாவர்க்கும் அவை கைகூடாமையின் புகழில்லை என்பது தோன்ற, ''எப்பால் நூலோர்க்கும் துணிவு'' என்றார். அச்ச முடையார்க்
கரண்இல்லை ஆங்கில்லை பொச்சாப் புடையார்க்கு நன்கு. காடு மலை முதலிய அரண்களுள்ளே நிற்பினும், மனத்தின்கண் அச்சமுடையார்க்கு அவற்றால் பயன்
இல்லை, அதுபோலச் செல்வமெல்லாம் உடையராயினும், மனத்தின்கண் மறவியை உடையார்க்கு அவற்றால் பயன் இல்லை. நன்மைக்கு ஏதுவாகலின் ''நன்கு'' என்றார். அச்சமுடையார் நின்ற அரண் அழியுமாறு போல, மறவி உடையாருடைய செல்வங்களும் அழியும் என்பதாயிற்று. முன்னுறக் காவா திழுக்கியான் தன்பிழை பின்னூ றிரங்கி விடும். தன்னால் காக்கப்படும் துன்பங்களை அவை வருவதற்கு முன்னே அறிந்து காவாது மறந்திருந்தான், பின்வந்துற்ற காலத்துக் காக்கல் ஆகாமையின் அப்பிழைப்பினை நினைத்து இரங்கிவிடும். காக்கப்படும் துன்பங்களாவன: சோர்வு பார்த்துப் பகைவர் செய்வன. ''ஊற்றின்கண்'' என்புழி உருவும் சாரியையும் உடன் தொக்கன. உற்ற காலத்துக் காக்கல் ஆகாமையின், இரங்கிவிடும் என்றார். இவை மூன்று பாட்டானும் பொச்சாப்பு உடையார்க்கு வரும் ஏதம் கூறப்பட்டது.
இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை வாயின் அதுஒப்ப்தில். அரசர்க்கு மறவாமைக் குணம் யாவர்மாட்டும் எக்காலத்தும் ஒழிவின்றி
வாய்க்குமாயின், அதனை ஒக்கும் நன்மை பிறிது இல்லை. வினை செய்வார்
சுற்றத்தார் என்னும் தம்பாலார் கண்ணும் ஒப்ப
வேண்டுதலின், ''யார் மாட்டும்'' என்றும், தாம் பெருகியஞான்றும் சுருங்கிய ஞான்றும்
ஒப்ப வேண்டுதலின் வழுக்காமை ''என்றும்''் கூறினார். வாயின்
என்பது முதனிலைத் |