திருக்குறள்
ஓலை எண் :   201

Zoom In NormalZoom Out

ய்த     நினைத்த   பொருளை  அந்நினைத்த  பெற்றியே  எய்துதல்
எளிதாம்,   பின்னும்    அதனையே   நினைக்கக்  கூடுமாயின். அது
கூடாதென்பது  ஒழிந்து நின்றமையின், ''மன்'' ஒழி இசைக்கண் வந்தது. அதனையே  நினைத்தலாவது:   மறவி  இன்றி அதன்கண்ணே முயறல்.
இவை  இரண்டு பாட்டானும் பொச்சாவாமைக்கு உபாயம் கூறப்பட்டது.
அஃதாவது,   அரசனால்     செய்யப்படும்   முறையினது   தன்மை.
அம்முறை ஒருபாற்கோடாது செவ்விய கோல் போறலின்  ''செங்கோல்'' எனப்பட்டது.     வடநூலாரும்,    ''  தண்டம்  ''   என்றார்.  அது
சோர்வில்லாத     அரசனால்    செயற்பாலது    ஆகலின்,    இது
பொச்சாவாமையின்  பின்  வைக்கப்பட்டது.    ஓர்ந்துகண்  ணோடா
திறைபுரிந்   தியார்மாட்டும்  தேர்ந்துசெய்  வஃதே  முறை.  தன்கீழ்
வாழ்வார்   குற்றம்  செய்தால்  அக்குற்றத்தை   நாடி:  யார்மாட்டும்
கண்ணோடாது,  நடுவு  நிலைமையைப்  பொருந்தி, அக்குற்றத்திற்குச்
சொல்லிய  தண்டத்தை நூலோரோடும் ஆராய்ந்து, அவ்வளவிற்றாகச்
செய்வதே முறையாம்.  நடுவு  நிற்றல்  இறைக்கு   இயல்பு ஆகலின்,
அதனை இறை என்றும் உயிரினும் சிறந்தார் கண்ணும் என்பார் ''யார்
மாட்டும்''   என்றும்   கூறினார். இறைமை ''இறை'' எனவும், செய்வது
''செய்வஃது''  எனவும்   நின்றன.    இதனான்    செங்கோன்மையது
இலக்கணம்   கூறப்பட்டது.    வான்நோக்கி  வாழும்  உலகெல்லாம்
மன்னவன் கோல்நோக்கி வாழும் குடி. உலகத்து உயிர் எல்லாம் மழை
உளதாயின் உளவாகா நிற்குமே எனினும், குடிகள் அரசன் செங்கோல்
உளதாயின் உளவாகா  நிற்கும். நோக்கி  வாழ்தல், இன்றியமையாமை.
வானின் ஆய  உணவை  ''வான்'' என்றும், கோலின் ஆய ஏமத்தைக்
''கோல்''  என்றும்  கூறினார். அவ்வேமம்  இல்வழி உணவுளதாயினும்
குடிகட்கு   அதனால்   பயனில்லை   என்பதாம். அந்தணர் நூற்கும்
அறத்திற்கும்  ஆதியாய்   நின்றது  மன்னவன் கோல். அந்தணர்க்கு
உரித்தாய   வேதத்திற்கும்,  அதனால்  சொல்லப்பட்ட அறத்திற்கும்
காரணமாய் நிலைபெற்றது, அரசனால் செலுத்தப் படுகின்ற செங்கோல்.
அரசர் வணிகர் ஏனையோர்க்கு உரித்தா