யினும், தலைமை பற்றி அந்தணர்
நூல் என்றார். ''மாதவர் நோன்பும்
மடவார் கற்பும், காவலன் காவல்'' மணி. 22 208 209 அன்றித்
தம் காவலான் ஆகலின், ஈண்டு ''அறன்''
என்றது அவை ஒழிந்தவற்றை. வேதமும்
அறனும்
அநாதியாயினும் செங்கோல் இல்வழி நடவா ஆகலின், அதனை அவற்றிற்கு ''ஆதி'' என்றும், அப் பெற்றியே தனக்கு ஆதியாவது
பிறிதில்லை என்பார் ''நின்றது'' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் செங்கோலது சிறப்புக் கூறப்பட்டது. குடிதழீஇக் கோல்ஓச்சும்
மாநில
மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு. தன்குடிகளையும்
அணைத்துச் செங்கோலையும் செலுத்தும் பெருநில வேந்தன் அடியை,
பொருந்தி,விடார் உலகத்தார். அணைத்தல் - இன்சொல் சொல்லுதலும், தளர்ந்துழி வேண்டுவன கொடுத்தலும்
முதலாயின. இவ்விரண்டனையும் வழுவாமல் செய்தான் நிலம்
முழுதும் ஆளும் ஆகலின், அவனை ''மாநில
மன்னன்'' என்றும், அவன் மாட்டு யாவரும் நீங்கா
அன்பினராவர் ஆகலின், ''அடிதழீஇ நிற்கும்
உலகு'' என்றும் கூறினார். இயல்புளிக் கோல்ஓச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு. பருவமழையும்
குன்றாத
விளைவும் ஒருங்கு கூடி, நூல்கள் சொல்லிய இயல்பால்
செங்கோலைச் செலுத்தும் அரசனது நாட்டின் கண்ணவாம். ''உளி'' என்பது மூன்றாவதன் பொருள்படுவதோர்
இடைச்சொல், வானும் நிலனும் சேரத் தொழிற்பட்டு வளம் சுரக்கும் என்பதாம். வேல்அன்று வென்றி தருவது மன்னவன்
கோல்அதூஉம் கோடா தெனின.் மன்னவனுக்குப் போரின்கண் வென்றியைக்
கொடுப்பது அவன் எறியும் வேல் அன்று, கோல், அஃதும் அப்பெற்றித்தாவது தான் கோடாதாயின். கோல் செவ்விதாயவழியே
''வேல் வாய்ப்பது என்பார், ''வேல் அன்று'' என்றார். ''மாண்ட அறநெறி
முதற்றே அரசின் கொற்றம்'' புறநா.55 என்றார் பிற |