அறிந்த அவற்றின்கண்
அதனின் முற்பட்டு நிற்கும் ஆகலான்; முகம் போல அறிவுமிக்கது பிறிது உண்டோ? இல்லை. ''உயிர்க்கே அறிவுள்ளது, ஐம்பூதங்களான இயன்ற முகத்திற்கு இல்லை''
என்பாரை நோக்கி, உயிரது கருத்தறிந்து அஃது உவக்குறின்
மலர்ந்தும், காய்வுறின் கருகியும் வரலான், ''உண்டு'' என மறுப்பார்
போன்று, குறிப்பு அறிதற்குக் கருவி கூறியவாறு. முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி உற்ற துணர்வார்ப்
பெறின். குறையுறுவானும் தன் மனத்தைக் குறிப்பான் அறிந்து தானுற்ற அதனைத் தீர்ப்பாரைப் பெறின்; அவர் தன் முகம் நோக்கும் வகை தானும் அவர் முகம் நோக்கி அவ்வெல்லைக்கண் நிற்க அமையும். ''உணர்வார்'' எனக் காரியத்தைக் காரணமாக்கிக் கூறினார். அவ்வெல்லையைக் கடந்து செல்லுமாயின் இருவர்க்குஞ் சிறுமையாமாகலின், அது வேண்டா என்பதாம். குறையுறுவான் இயல்பு கூறுவார்
போன்று கருவி கூறியவாறு. இவைமூன்று பாட்டானும் குறிப்பறிதற் கருவி முகம் என்பது கூறப்பட்டது. பகைமையும் கேண்மையும் கண்உரைக்கும் கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின். வேந்தர் தம் நோக்கு வேறுபாட்டின் தன்மையை அறியவல்ல அமைச்சரைப் பெறின்; அவர்க்கு மனத்துக் கிடந்த பகைமையையும் ஏனைக் கேண்மையையும் வேற்று வேந்தர் சொல்லிற்றிலராயினும், அவர் கண்களே சொல்லும். இறுதிக்கண் ''கண்'' ஆகுபெயர். நோக்கு
வேறுபாடாவன: வெறுத்த நோக்கமும், உவந்த நோக்கமும். உணர்தல்:
அவற்றை அவ்வக்குறிகளான் அறிதல். நுண்ணியம் என்பார் அளக்கும்கோல் காணும்கால் கண்அல்ல
தில்லை பிற. யாம் நுண்ணறிவு உடையேம் என்றிருக்கும் அமைச்சர் அரசர் கருத்தினை அளக்குங் கோலாவது; ஆராயுமிடத்து
அவர் கண்ணல்லது பிற இல்லை. அறிவின் உண்மை அஃதுடையார்மேல் ஏற்றப்பட்டது.
இங்கிதம், வடிவு, தொழில், சொல் என்பன முதலாகப் பிறர் கருத்தளக்கும் அளவைகள்
பல. அவையெல்லாம் முன் அறிந்த வழி அவரான் மறைக்கப்படும்; நோக்கம் மனத்தோடு
கலத்தலான் ஆண்டு மறைக்கப்படாது என்பது பற்றி அதனையே பிரித்துக் கூறினார்.இனி ''அலைக்குங்கோல்'' என்று பாடம் ஓதி, ''நுண்ணியம்'' என்று இருக்கும் அமைச்சரை அரசரலைக்குங் |