கோலாவது கண் என உரைத்து, தன்
வெகுளி நோக்கால் அவர் வெகுடற்குறிப்பு
அறிக என்பது கருத்தாக்குவாரும்உளர். இவை இரண்டு
பாட்டானும் நுண்கருவி நோக்கு
என்பது கூறப்பட்டது. அஃதாவது,
அரசனோடிருந்த அவையினது இயல்பை அறிதல்,
காரியஞ் சொல்லுங்கால் அவன் குறிப்பறிதலேயன்றி இதுவும் வேண்டுதலின், இஃது அதன் பின் வைக்கப்பட்டது . அவைஅறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின் தொகைஅறிந்த தூய்மை யவர். சொல்லின் குழுவினை அறிந்த தூய்மையினையுடையார்; தாமொன்று சொல்லுங்கால் அப்பொழுதை அவையினை அறிந்து
ஆராய்ந்து சொல்லுக. சொல்லின் குழுவெனவே, செஞ்சொல், இலக்கணச் சொல், குறிப்புச் சொல் என்னும் மூவகைச் சொல்லும் அடங்கின. தூய்மை: அவற்றுள் தமக்காகாதன ஒழித்து ஆவன கோடல். அவை என்றது ஈண்டு அதன் அளவை. அது மிகுதி, ஒப்பு, தாழ்வு என மூவகைத்து. அறிதல். தம்மொடு தூக்கி அறிதல். ஆராய்தல்:
இவ்வவைக்கண் சொல்லும் காரியம் இது, சொல்லுமாறு இது, சொன்னால் அதன் முடிவு இது என்று, இவை உள்ளிட்டன ஆராய்தல்.
இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின் நடைதெரிந்த நன்மை யவர். சொற்களின் நடையினை ஆராய்ந்தறிந்த
நன்மையினையுடையார்; அவைக்கண் ஒன்று சொல்லுங்கால் அதன் செவ்வியை ஆராய்ந்து அறிந்து வழுப்படாமல் மிகவும் தெளிந்து சொல்லுக. சொற்களின் நடையாவது:
அம்மூவகைச்
சொல்லும் செம்பொருள், இலக்கணப்பொருள், குறிப்புப் பொருள் என்னும்
பொருள்களைப் பயக்குமாறு. செவ்வி: கேட்டற்கண் விருப்புடைமை. வழு:
சொல் வழுவும் பொருள் வழுவும். இவை இரண்டு
பாட்டானும் ஒன்று சொல்லுங்கால் அவையறிந்தே சொல்ல
வேண்டும் என்பது கூறப்பட்டது. அவைஅறியார்
சொல்லல் |