திருக்குறள்
ஓலை எண் :   261

Zoom In NormalZoom Out

என்பது      கருதிப்    ''பொச்சாந்தும்    சொல்லற்க''     என்றார்.
அங்கணத்துள்   உக்க   அமிழ்தற்றால்  தம்கணத்தார்  அல்லார்முன்
கோட்டி   கொளல்.   நல்லார்   தம்மினத்தரல்லாதார்   அவைக்கண்
ஒன்றனையும்    சொல்லற்க;    சொல்லின்,    அது    தூயதல்லாத
முற்றத்தின்கண்   உக்க   அமிழ்தினை  ஒக்கும்.  ''கொள்''  என்னும்
முதனிலைத்    தொழிற்பெயர்    முன்னின்று    பின்    எதிர்மறை
அல்விகுதியோடு  கூடி  ''மகன்  எனல்''  குறள்  196  என்பது போல்
நின்றது.  ''சொல்லின்'',  ''அது'' என்பன அவாய் நிலையான்   வந்தன.
பிறரெல்லாம்  ''கொளல்'' என்பதனைத் தொழிற்பெயராக்கி உரைத்தார்,
அவர்   அத்தொழில்   அமிழ்து  என்னும்  பொருள் உவமையோடு
இயையாமை  நோக்கிற்றிலர்.  சாவா  மருந்தாதல்  அறிந்து நுகர்வார்
கையினும்  படாது அவ்வங்கணத்துக்கும் இயைபு இன்றிக் கெட்டவாறு
தோன்ற  ''உக்க  அமிழ்து''  என்றார். அச்சொல் பயனில் சொல்லாம்
என்பதாயிற்று.  இவை  இரண்டு  பாட்டானும் தாழ்ந்தார் அவைக்கண்
ஒரு   வழியும்   சொல்லற்க   என்பது  கூறப்பட்டது.   அஃதாவது,
சொல்லுதற்குரிய    அவையினையறிந்து    சொல்லுங்கால்   அதற்கு
அஞ்சாமை.    அதிகார   முறைமையும்    இதனானே   விளங்கும்.
கைஅறிந்து   வல்லவை   வாய்சோரார்   சொல்லின் தொகைஅறிந்த
தூய்மை யவர்.  கற்று வல்ல அவை, அல்லா அவை என்னும் அவை
வகையினை   அறிந்து  வல்ல  அவைக்கண்  ஒன்று  சொல்லுங்கால்
அச்சத்தான்  வழுப்படச்  சொல்லார்;  சொல்லின்  தொகையெல்லாம்
அறிந்த  தூய்மையினை  உடையார். இருந்தாரது வன்மை அவைமேல்
ஏற்றப்பட்டது.    ''வல்லவை''    என்பதற்கு,    தாம்    ''கற்றுவல்ல
நூற்பொருள்களை''   என்று   உரைப்பாரும்   உளர்.  ''அச்சத்தான்''
என்பது  அதிகாரத்தான்  வந்தது.  ''சொல்லின்  தொகை''  ''தூய்மை''
என்பவற்றிற்கு  குறள்  711  மேல்  உரைத்தாங்கு உரைக்க. கற்றாருள்
கற்றார்  எனப்படுவர்  கற்றார்முன்  கற்ற செலச்சொல்லு வார். கற்றார்
எல்லாரினும்    இவர்    நன்கு    கற்றார்   என்று  உலகத்தாரால்
சொல்லப்படுவார்;  கற்றார்  அவைக்கண் அஞ்சாதே தாம் கற்றவற்றை
அவர் மனம் கொள்ளும்