வகை சொல்ல வல்லார். உலகம் அறிவது அவரையே
ஆகலின் அதனால் புகழப்படுவாரும் அவர் என்பதாம். பகையகத்துச்
சாவார் எளியர் அரியர் அவையகத் தஞ்சா தவர். பகையிடை அஞ்சாது புக்குச் சாவவல்லார் உலகத்துப் பலர்; அவையகத்து அஞ்சாதாவர் அவையிடை அஞ்சாது புக்குச் சொல்ல வல்லார் சிலர். ''அஞ்சாமை'', ''சாவார்'' என்பதனோடும் கூட்டி, அதனால் ''சொல்ல
வல்லார்'' என்பது வருவித்து உரைக்கப்பட்டது. இவை மூன்று பாட்டானும் அவை அஞ்சாரது சிறப்புக் கூறப்பட்டது. கற்றார்முன்
கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற மிக்காருள் மிக்க கொளல்.
பல நூல்களையும் கற்றார் அவைக்கண் தாம் கற்றவற்றை
அவர்மனம் கொள்ளுமாற்றாற் சொல்லி; அவற்றின் மிக்க பொருள்களை அம்மிக்க கற்றாரிடத்து அறிந்துகொள்க. எல்லாம் ஒருவற்குக்
கற்றல் கூடாமையின், வேறு வேறாய
கல்வியுடையார் பலர் இருந்த அவைக்கண்
தாம் கற்றவற்றை அவர்க்கு
ஏற்பச் சொல்லுக, சொல்லவே, அவரும்அவையெல்லாம் சொல்லுவர் ஆகலான், ஏனைக் கற்கப்பெறாதன கேட்டறியலாம் என்பதாயிற்று. இதனால் அவனது ஒருசார்பயன் கூறப்பட்டது. ஆற்றின் அளவறிந்து கற்க
அவைஅஞ்சா மாற்றம் கொடுத்தல் பொருட்டு. சொல்லிலக்கண நெறியானே அளவை நூலை அமைச்சர் உட்பட்டுக் கற்க; வேற்றுவேந்தர் அவையிடை அஞ்சாது அவர் சொல்லிய சொற்கு உத்தரஞ்சொல்லுதற் பொருட்டு. அளவை நூல், சொல்
நூல் கற்றே கற்க வேண்டுதலின்,அதற்கு அஃது ஆறு எனப்பட்டது. அளக்கும் கருவியை ''அளவு'' என்றார், ஆகுபெயரான்.
அவர் சொல்லை வெல்வதொரு சொல் சொல்லலாவது, நியாயத்து
வாதசற்ப விதண்டைகளும் சலசாதிகளும்
முதலிய கற்றார்க்கே ஆகலின், அவற்றைப்
பிழையாமல் கற்க என்பதாம், இதனான்
அதன் காரணம் கூறப்பட்டது. வாளொடுஎன்
வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு. வன்கண்மையுடை |