திருக்குறள்
ஓலை எண் :   263

Zoom In NormalZoom Out

யார்     அல்லார்க்கு வாளொடு என்ன இயைபு உண்டு; அது  போல்
நுண்ணியாரது  அவையை  அஞ்சுவார்க்கு  நூலோடு  என்ன இயைபு
உண்டு?  இருந்தாரது  நுண்மை  அவைமேல்  ஏற்றப்பட்டது.  நூற்கு
உரியர்   அல்லர்   என்பதாம்.   பகையகத்துப்  பேடிகை  ஒள்வாள்
அவையகத்  தஞ்சு  மவன்கற்ற  நூல்.  எறியப்படும்  பகை  நடுவண்
அதனை  அஞ்சும்  பேடி பிடித்த கூர்வாளை ஒக்கும்; சொல்லப்படும்
அவை  நடுவண்  அதனை  அஞ்சுமவன்  கற்ற  நூல். பேடி : பெண்
இயல்பு மிக்கு ஆண் இயல்பும் உடையவள்.களமும் வாய்த்துத் தானும்
நன்றாய்    இருந்ததேயாயினும்    பிடித்தவள்   குற்றத்தால்   வாள்
சிறப்பின்றாயினாற்  போல,  அவையும்  வாய்த்துத்  தானும்  நன்றாய்
இருந்ததேயாயினும்,  கற்றவன்  குற்றத்தால்  நூல்   சிறப்பின்றாயிற்று.
பல்லவை கற்றும் பயம்இலரே நல்லவையுள் நன்கு செலச்செல்லா தார்.
நல்லார்   இருந்த   அவைக்கண்  நல்ல  சொற்பொருள்களைத்  தம்
அச்சத்தான்  அவர்க்கு  ஏற்கச் சொல்லமாட்டாதார்; பல  நூல்களைக்
கற்றாராயினும்   உலகிற்குப்   பயன்படுதல்   இலர்.  அறிவார்  முன்
சொல்லாமையின்  கல்வியுண்மை  அறிவாரில்லை  என்பதாம்.  இனிப்
''பயமிலர்''    என்பதற்கு,    ''கல்விப்   பயனுடையரல்லர்''    என்று
உரைப்பாரும் உளர். கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும் நல்லார்
அவையஞ்சு  வார். நூல்களைக் கற்றுவைத்தும், அவற்றால் பயனறிந்து
வைத்தும்,   நல்லார்   இருந்த   அவையினை   அஞ்சி   ஆண்டுச்
சொல்லாதாரை;    உலகத்தார்   கல்லாதவரினும்   கடையர்  என்று
சொல்லுவர். அக்கல்வி  அறிவுகளால்  பயன் தாமும் எய்தாது பிறரை
எய்துவிப்பதும்   செய்யாது,   கல்வித்துன்பமே   எய்தி   நிற்றலின்,
''கல்லாதவரின்    கடை''    என   உலகம்    பழிக்கும்  என்பதாம்.
உளர்எனினும் இல்லாரொ டொப்பர்