களன்அஞ்சிக் கற்ற
செலச்சொல்லா தார். அவைக்களத்தை அஞ்சித் தாம் கற்றவற்றை அதற்கு ஏற்கச் சொல்ல
மாட்டாதார்; உயிர் வாழ்கின்றாராயினும்
உலகத்தாரால் எண்ணப்படாமையின் இறந்தாரோடு ஒப்பர்.
ஈண்டுக் ''களன்'' என்றது ஆண்டிருந்தாரை. இவை
ஐந்து பாட்டானும் அவைஅஞ்சுவாரது
இழிவு கூறப்பட்டது. இனி, அவ்வரசனாலும்
அமைச்சனாலும் கொண்டு உய்க்கப்படுவதாய ஏனை அரண் முதலிய அங்கங்கட்கு இன்றியமையாச் சிறப்பிற்றாய நாடு ஒர் அதிகாரத்தாற் கூறுகின்றார். அஃதாவது இன்னதென்பதூஉம் அதிகார முறைமையும் இதனுள் விளங்கும். தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு. குன்றாத விளையுளைச் செய்வோரும்; அறவோரும்; கேடு
இல்லாச் செல்வமுடையோரும்; ஒருங்கு வாழ்வதே நாடாவது: மற்றை உயர்திணைப் பொருள்களோடும் சேர்தல்தொழிலோடும் இயையாமையின், ''விளையுள்'' என்பது உழவர்மேல் நின்றது. குன்றாமை: எல்லா உணவுகளும்
நிறைய உளவாதல். இதனான் வாழ்வார்க்கு வறுமையின்மை பெறப்பட்டது. அறவோர் - துறந்தோர், அந்தணர் முதலாயினார். ''நற்றவஞ்செய்வார்க்கு இடம்: தவம் செய்வார்க்கும் அஃது இடம்'' சீவக. நாமக.48 என்றார் பிறரும். இதனான் அழிவின்மை பெறப்பட்டது. கேடு இல்லாமை - வழங்கத் தொலையாமை. செல்வர் - கலத்தினும் காலினும் அரும்பொருள் தரும் வணிகர். இதனான் அரசனுக்கும் வாழ்வார்க்கும் பொருள் வாய்த்தல் பெறப்பட்டது. பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டான் ஆற்ற விளைவது நாடு. அளவிறந்த பொருளுடைமையால் பிற
தேயத்தாரானும் விரும்பத்தக்கதாய்; கேடின்மையோடுகூடி
மிகவிளைவதே நாடாவது. அளவிறப்பு, பொருள்களது பன்மைமேலும் தனித்தனி அவற்றின் மிகுதி மேலும் நின்றது. கேடாவது, மிக்க
பெயல், பெயலின்மை, எலி, விட்டில், |