திருக்குறள்
ஓலை எண் :   266

Zoom In NormalZoom Out

இல்லாததே   நாடாவது. சங்கேதம் - சாதி பற்றியும் கடவுள் பற்றியும்
பலர்க்கு  உளதாம் ஒருமை. ஆறலைப்பார், கள்வர், குறளை கூறுவார்
முதலிய மக்களும், பன்றி,புலி, கரடி முதலிய விலங்குகளும். ''உட்பகை,
குறும்பு''    என்பன    ஆகுபெயர்.    இம்மூன்றும்   அரசனாலும்
வாழ்வாராலும்  கடியப்பட்டு நடப்பதே  நாடு  என்பதாம். கேடறியாக்
கெட்ட இடத்தும் வளங்குன்றா நாடென்ப நாட்டின் தலை. பகைவரால்
கெடுதலறியாததாய்;  அரிதின்  கெட்டதாயினும்  அப்பொழுதும் தன்
வளங்குன்றாத நாட்டினை; எல்லா நாட்டிலும் தலை என்று சொல்லுவர்
நூலோர்.  ''அறியாத'',  ''குன்றாத'' என்னும் பெயரெச்சங்களின் இறுதி
நிலைகள் விகாரத்தால் தொக்கன. கேடு அறியாமை அரசனாற்றலானும்,
கடவுட்பூசை  அறங்கள்  என்றிவற்றது  செயலானும்  வரும். வளம் -
ஆகரங்களிற்     படுவனவும்,      வயலினும்      தண்டலையினும்
விளைவனவுமாம்.    குன்றாமை:    அவை   செய்ய   வேண்டாமல்
இயல்பாகவே  உளவாயும்  முன்  ஈட்டப்பட்டும்  குறைவறுதல். இவை
ஆறு  பாட்டானும்  நாட்டது  இலக்கணம்  கூறப்பட்டது. இருபுனலும்
வாய்ந்த  மலையும்  வருபுனலும்  வல்லரணும் நாட்டிற் குறுப்பு.  ''கீழ்
நீர்'',   ''மேல்நீர்''  எனப்பட்ட  தன்கண்  நீரும்;   வாய்ப்புடையதாய
மலையும்;  அதனினின்றும்  வருவதாய  நீரும்;  அழியாத   நகரியும்;
நாட்டிற்கு  அவயமாம்.  ஈண்டுப்  புனல்  என்றது துரவு கேணிகளும்
ஏரிகளும்ஆறுகளுமாகிய     ஆதாரங்களை,     அவயமாதற்குரியன
அவையேஆகலின்.  அவற்றான்  வானம்  வறப்பினும்  வளனுடைமை
பெறப்பட்டது. இடையதன்றி ஒ